இந்த மாத இறுதியில் புயலுக்கு வாய்ப்பு: வடமாவட்டங்களுக்கு பாதிப்பா..?


இந்த மாத இறுதியில் புயலுக்கு வாய்ப்பு: வடமாவட்டங்களுக்கு பாதிப்பா..?
x

கோப்புப்படம்

தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக நேற்று முன்தினம் முதல் மழை பெய்யத் தொடங்கி இருக்கிறது.

சென்னை,

வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 16-ந்தேதி தொடங்கியது. தமிழ்நாட்டில் 2 சுற்று மழை பெய்த நிலையில், வங்கக்கடலில் உருவாகி ஆந்திராவில் கரையை கடந்த மோந்தா புயலால், ஒரு சிறிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக நேற்று முன்தினம் முதல் மழை பெய்யத் தொடங்கி இருக்கிறது.

வருகிற 7-ந் தேதி வரை வட மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் பகலில் வெயில், மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் மழை வெளுத்து வாங்க உள்ளது. 8, 9 மற்றும் 10-ந் தேதிகளில் தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சிமலை மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

இந்த மாதம் இயல்பைவிட குறைவாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதே கருத்தை சில தனியார் வானிலை ஆய்வாளர்களும் குறிப்பிட்டிருந்தனர். ஆனால் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர், நவம்பரில் (அதாவது இந்த மாதத்தில்) இயல்பைவிட அதிகமாக மழை பெய்யும் என்றும், முதல் பாதியில் வெயில் சுட்டெரித்தாலும், இரண்டாம் பாதியில் நல்ல மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறி வருகிறார்.

வட மாவட்டங்களில் அதி கனமழை..!

வருகிற 12-ந் தேதிக்கு பிறகு கிழக்கு திசை காற்று தமிழக பகுதிகளுக்குள் வருகிறது. இதனைத்தொடர்ந்து 15-ந் தேதியில் இருந்து மீண்டும் பருவமழை தீவிரம் அடையும்.

அதனையடுத்து 4-வது வாரத்தில் அதாவது 23-ந் தேதி முதல் 30-ந் தேதிக்கு இடைபட்ட நாட்களில் புயலுக்கான வாய்ப்பு உள்ளதாகவும், இந்த புயலினால் வட மாவட்டங்களில் அதி கனமழை வரை பெய்து, மழைப்பாதிப்பை கொடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

1 More update

Next Story