'ப' வடிவில் பள்ளி இருக்கைகள் ஏன்? - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்


ப வடிவில் பள்ளி இருக்கைகள் ஏன்? - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
x

மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பள்ளி வகுப்பறைகளில் பெஞ்ச் இருக்கைகளை மாற்றி அமைக்க பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அவர் அனுப்பியுள்ளார். இதன் மூலம் கற்றலில் மாணவர்களின் ஆர்வம் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், 'ப' வடிவில் பள்ளி இருக்கைகள் மாற்றப்படுவது ஏன் என்ற கேள்விக்கு அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது;

"அனைவரும் சமம் என்பதை பள்ளியிலேயே மாணவர்களுக்கு தெரியவைக்கும் முறையில் இவ்வாறு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வகுப்பறைகளில் முன்வரிசை, பின்வரிசை என்ற பாகுபாட்டை தவிர்க்க முடியும். மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

முதற்கட்டமாக அனைத்து பள்ளிகளிலும் பரிசோதனை முறையில் வகுப்பறைகளில் 'ப' வடிவ இருக்கைகளில் மாணவர்கள் அமரவைக்கப்படுவர். இதன் பின்னர், அதன் சதக, பாதகங்கள் அறியப்பட்டு அதற்கேற்பவாறு அனைத்து வகுப்பறைகளிலும் இம்முறை பின்பற்றலாமா என்பது குறித்து முடிவெடுக்கப்படும்."

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story