விழுப்புரம்: கார் - சிலிண்டர் லாரி மோதி விபத்து - சாலையில் சிதறிய சிலிண்டர்கள்

லாரியில் இருந்த சுமார் 350க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் சாலையில் குவியலாக கிடந்தன.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த திருவண்ணாமலை சாலையில் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த கார் மீது மோதி லாரி விபத்துக்குள்ளானது. கார் மீது மோதுவதை தவிர்க்கும் நோக்கில் லாரி டிரைவர் லாரியை வாகமாக திருப்பியபோது லாரி கவிழ்ந்தது. இதனால் லாரியில் இருந்த சுமார் 350க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் சாலையில் குவியலாக கிடந்தன.
நல்வாய்ப்பாக சிலிண்டர் வெடிக்காததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பொதுமக்களின் உதவியுடல் சாலையில் கிடந்த சிலிண்டர்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். காரில் பயணம் செய்த ஆந்திராவை சேர்ந்தவர்கள் லேசான காயங்களுடன் உயர் தப்பினர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






