சரக்கு வாகனம் மீது ரெயில் மோதி விபத்து

சென்னையில் இருந்து நிலக்கரி லோடு ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு ரெயில் வாகனம் மீது மோதியது.
சேலம்,
மேட்டூர் புதிய அனல் மின்நிலையத்திற்கு சென்னை துறைமுகத்தில் இருந்து நிலக்கரி கொண்டு வருவதற்காக ரெயில்வே தண்டவாளம் மற்றும் ரெயில் நிறுத்தும் வசதி உள்ளது. இந்த நிலையில் நேற்று அதிகாலையில் மேட்டூர் புதிய அனல் மின்நிலையத்திற்கு தளவாட பொருட்கள் ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் ஒன்று வந்தது. அப்போது ரெயில் எதுவும் வராது என்று நினைத்த டிரைவர் சரக்கு வாகனத்தை அங்குள்ள தண்டவாள பகுதியில் பொருட்களை இறக்குவதற்கு வசதியாக நிறுத்தி உள்ளார்.
இதனிடையே சென்னையில் இருந்து நிலக்கரி லோடு ஏற்றிக்கொண்டு சரக்கு ரெயில் அங்கு வந்தது. அப்போது சரக்கு வாகனம் நிற்பதை ரெயில் இயக்குபவர் கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் எதிர்பாராதவிதமாக தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு வாகனம் மீது ரெயில் என்ஜின் மோதியது. இதில் சரக்கு ஆட்டோவின் முன்பகுதி நொறுங்கி சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக அதில் டிரைவர் இல்லாததால் உயிர் தப்பினார்.






