தக்காளி விலை கிடுகிடு உயர்வு..! புலம்பும் இல்லத்தரசிகள் - காரணம் என்ன.?


தக்காளி விலை கிடுகிடு உயர்வு..! புலம்பும் இல்லத்தரசிகள் - காரணம் என்ன.?
x
தினத்தந்தி 1 Dec 2025 6:02 PM IST (Updated: 1 Dec 2025 6:06 PM IST)
t-max-icont-min-icon

தக்காளி விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சென்னை

அதிகரிக்கும் தக்காளி விலை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காய்கறி விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தக்காளி, கத்தரிக்காய் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. நெல்லையில் தக்காளி கிலோவுக்கு ரூ.80க்கும், கத்தரிக்காய் விலை ரூ.120க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையிலும் தக்காளி விலை அதிகரித்துள்ளது.

இல்லத்தரசிகள் புலம்பல்

தக்காள் விலை அதிகரிப்பு குறித்து சென்னையை சேர்ந்த இல்லத்தரசிகள் கூறுகையில்,

”தக்காளி இல்லாமல் குழம்பு வைக்க முடியாது. ரசம் கூட தக்காளி இல்லாமல் செய்ய முடியாது. தக்காளி வீட்டில் இருப்பதை உறுதி செய்துகொண்டுதான் சமையல் செய்வோம். தற்போது விலை அதிகரித்துள்ளதால், தக்காளி பயன்படுத்தாத பிற உணவு வகைகள் செய்து வருகிறோம். புளி சாதம், லெமன் சாதம் செய்கிறோம்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி விலை 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. பின்னர் படிப்படியாக அதிகரித்து தற்போது கிலோ ரூ.85-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை குறைவாக இருந்தால் நன்றாக இருக்கும். விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு அவர்கள் கூறினர்.

காரணம் என்ன.?

தக்காளி உள்ளிட்ட காய்கறி விலை அதிகரிப்பு குறித்து வியாபாரிகள் கூறுகையில்,

”தொடர் மழையால் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி பயிர்கள் சேதம் அடைந்தன. மேலும் காய்கறி விளைச்சலும் பாதிக்கப்பட்டது. இதனால் சந்தைகளுக்கு காய்கறிகள் வரத்து கணிசமாக குறைந்து விட்டது. இதையொட்டி காய்கறிகளின் விலை திடீரென்று உயர்ந்து உள்ளது. திருமண முகூர்த்த நாள் உள்ளிட்ட காரணங்களால் காய்கறிகளின் நுகர்வு அதிகரித்து உள்ளது. வரும் நாட்களிலும் விலை உயர்வு இருக்கக்கூடும்.”

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story