இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 26-04-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 26 April 2025 1:42 PM IST
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி, என்.எல்.சிக்கு ஒரு நீதியா?
கடலூரில் நிலத்தடி நீரில் இயல்பைவிட 115 மடங்கு கூடுதலாக பாதரசம் கலந்துள்ளது
கடலூர் என்.எல்.சி நிலக்கரி சுரங்கத்தால் குடிநீர் மாசடைந்துள்ளது, உடனே என்எல்சியை மூட வேண்டும்
- அன்புமணி ராமதாஸ்
- 26 April 2025 1:41 PM IST
- கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் சட்ட திருத்தம் தமிழக பேரவையில் அறிமுகம்
- வலுக்கட்டாய நடவடிக்கைகளில் கடனை வசூல் செய்தால் பிணையில் வெளிவர முடியாத அளவுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும்
- பணக்கடன்கள் வழங்குவோர் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர சட்டமுன்வடிவை தாக்கல் செய்தார் துணை முதல்வர் உதயநிதி
- 26 April 2025 12:29 PM IST
"சிகரெட் லைட்டர்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்" தென்மாவட்டங்களில் தீப்பெட்டி தொழில்பாதிக்கப்படுவதாக கடம்பூர் ராஜு கொண்டு வந்த தீர்மானத்திற்கு தங்கம் தென்னரசு பதில்
- 26 April 2025 11:00 AM IST
கோவையில் நடைபெறும் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க தவெக தலைவர் விஜய் கோவை வருகை தந்தார். விஜய்யை காண கோவை விமான நிலையத்தில் தவெகவினரும் ரசிகர்களும் திரண்டு இருந்ததால், அப்பகுதியே ஸ்தம்பித்தது. கோவை விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் திறந்த வேனில் ஏறிய விஜய், தொண்டர்களை பார்த்து கை அசைத்தார். இதனார்கள் தவெக தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.
- 26 April 2025 10:43 AM IST
- கல்விதான் நமக்கான ஆயுதம் - முதலமைச்சர்
- "கல்விதான் நமக்கான ஆயுதம், எந்த இடர் வந்தாலும் கல்வியை கைவிட்டுவிட கூடாது"
- சமத்துவம், சமூகநீதி, வாய்மை, நேர்மை ஆகியவற்றை மனதில் வைத்து ஏழை, எளிய மக்களின் உயர்வுக்காக பணியாற்ற வேண்டும் - முதல்வர்
- சென்னையில் நடைபெற்ற நான் முதல்வன் திட்ட குடிமைப்பணி தேர்வு வெற்றியாளர்களுக்கான பாராட்டு விழாவில் முதல்வர் வேண்டுகோள்
- 26 April 2025 10:00 AM IST
நான் முதல்வன் திட்டம் பலன் அளித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது: எந்த போட்டித்தேர்வுகளிலும் வெற்றி பெறவே நான் முதல்வன் திட்டம்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு
- 26 April 2025 9:05 AM IST
- தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி நிர்வாகிகள் கருத்தரங்கம், கோவையில் இன்று தொடக்கம்
- 2 நாட்கள் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்கும் த.வெ.க தலைவர் விஜய், இன்று கோவையில் ரோடு ஷோ மேற்கொள்கிறார்
- 12 ஆண்டுகளுக்கு பிறகு கோவை செல்லும் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்க கட்சியினர் ஏற்பாடு
- விமான நிலையம் முதல் விஜய் தங்க உள்ள ஹோட்டல் வரைக்கும் வரவேற்பு அளிக்க தொண்டர்கள் திட்டம்
- சக்தி சாலையில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் நடைபெறும் கருத்தரங்க கூட்டத்தில், மதியம் 2 மணிக்கு விஜய் கலந்து கொள்கிறார்
- தனி விமானம் மூலம் கோவைக்கு காலை 11.10 மணிக்கு செல்லும் விஜய், அவிநாசி சாலையில் உள்ள ஹோட்டலில் தங்குகிறார்
- 26 April 2025 9:04 AM IST
- காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு
- பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் உடனடி பதில் தாக்குதல் நடத்தப்பட்டது - இந்திய ராணுவம்
- நள்ளிரவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்புகள் இல்லை என இந்திய ராணுவம் தகவல்