இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 25-11-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 25 Nov 2025 9:36 AM IST
ஊட்டி: ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணை கொன்ற புலியை தேடும் பணி தீவிரம்
மாடு மேய்க்கச் சென்ற பெண்ணை புலி அடித்துக்கொன்றது. வனப்பகுதியில் தலை இன்றி கிடந்த உடல் மீட்கப்பட்டது.
- 25 Nov 2025 9:34 AM IST
41 பேர் பலியான வழக்கு: புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவிடம் 10 மணி நேரம் சி.பி.ஐ. விசாரணை
புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்பட 5 பேரிடம் 10 மணி நேரம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
- 25 Nov 2025 9:33 AM IST
பா.ஜனதாவின் ‘சி டீம்’தான் த.வெ.க. - அமைச்சர் ரகுபதி
யாரை கண்டும் அஞ்ச வேண்டிய அவசியம் தி.மு.க.வுக்கு இல்லை என அமைச்சர் ரகுபதி கூறினார்.
- 25 Nov 2025 9:30 AM IST
வங்கக்கடலில் உருவாகும் புயல்.. சென்னைக்கு 29-ந் தேதி ‘ஆரஞ்சு’ அலர்ட்
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
- 25 Nov 2025 9:29 AM IST
ராசிபலன் (25.11.2025): நினைத்து பாராத ஒரு நல்ல செய்தி வந்தடையும் நாள்..!
கன்னி
வியாபாரிகளுக்கு முதல் போடுவதற்கு வங்கிக் கடன் கிடைக்கும். உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிட்டும். செலவு கூடும். சிக்கனம் தேவை. தம்பதிகளிடையே ஒற்றுமை மேம்படும். புதுநபர்களின் அறிமுகம் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உதவுவர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சலுகைகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கரும்பச்சை











