இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 24-11-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 24 Nov 2025 9:51 AM IST
அதிரடியாக குறைந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன..?
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.880 குறைந்து ஒரு சவரன் ரூ.92,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.110 குறைந்து ஒரு கிராம் ரூ.11,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ஆயிரம் ரூபாயும் குறைந்து, ஒரு கிராம் ரூ.171-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 71 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- 24 Nov 2025 9:50 AM IST
கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.?
கனமழை காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைந்த கல்லூரிகளில் இன்று (திங்கட்கிழமை) நடக்க இருந்த பருவ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.
தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவாரூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை,விருதுநகர், சிவகங்கை,நாகப்பட்டினம், கரூர், அரியலூர், மதுரை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று (நவ.24) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி, காரைக்காலிலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.








