இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 23-12-2025


LIVE
இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 23-12-2025
x
தினத்தந்தி 23 Dec 2025 9:12 AM IST (Updated: 23 Dec 2025 5:14 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • ஜன.6 ஆம் தேதிக்குள் இலவச வேட்டி, சேலை
    23 Dec 2025 12:36 PM IST

    ஜன.6 ஆம் தேதிக்குள் இலவச வேட்டி, சேலை

    ஜன.6 ஆம் தேதிக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச வேட்டி, சேலை வழங்கப்படும் என அமைச்சர் காந்தி தகவல் தெரிவித்துள்ளார். டிச.15 ஆம் தேதியே குடும்ப அட்டைதாரர்களுக்காக பொங்கல் வேட்டி, சேலைகள் வருவாய்த் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

  • அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
    23 Dec 2025 12:33 PM IST

    அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

    சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் கட்சியின் பொது செயலாளர் கே.பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனுவாசன், கே.பி.முனுசாமி உள்ளிட்டோருடன் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இன்னும் சற்று நேரத்தில் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

    அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் காத்திருக்கிறார். தீப்பெட்டி தொழிலாளர் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மத்திய மந்திரி கோயலிடம் மனு அளிக்க கடம்பூர் ராஜு வருகை தந்துள்ளார். நயினார் நாகேந்திரன் இல்லத்திற்கு சென்ற கடம்பூர் ராஜுவை தனது காரிலேயே கமலாலயம் அழைத்து வந்தார் நயினார். மத்திய மந்திரி பியூஷ்கோயலிடம் மனு அளிக்க கமலாலய தரைதளத்தில் கடம்பூர் ராஜு காத்திருக்கிறார். பியூஷ் கோயல் தலைமையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முதல் தளத்தில் நடந்து வருகிறது.

  • டெல்லியில் வங்காள தேச தூதரகம் முன் போராட்டம்
    23 Dec 2025 12:19 PM IST

    டெல்லியில் வங்காள தேச தூதரகம் முன் போராட்டம்

    வங்காள தேசத்தில் இந்து இளைஞர் கொலையை கண்டித்து டெல்லியில் உள்ள வங்காள தேச தூதரகம் முன் விஸ்வ இந்து பரிஷத் போராட்டம் நடத்தினர். இதனால் போராட்டத்தில் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டு தடுப்புகளை உடைத்து உள்ளே நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  • காலில் கடித்த கட்டுவிரியன்
    23 Dec 2025 12:17 PM IST

    காலில் கடித்த கட்டுவிரியன்

    திண்டுக்கல், நத்தம் அருகே சித்ரா என்ற பெண்ணை நீல நிறம் கொண்ட அரியவகை கட்டு விரியன் பாம்பு கடித்துள்ளது. உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த பெண்னின் உறவினர்கள் கடித்த பாம்பை கொன்று மருத்துவமனைக்கு எடுத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

  • விஜயை சந்திக்க வந்த பெண் நிர்வாகி தடுத்து நிறுத்தம்
    23 Dec 2025 11:45 AM IST

    விஜயை சந்திக்க வந்த பெண் நிர்வாகி தடுத்து நிறுத்தம்

    சென்னையில் தவெக தலைவர் விஜயை சந்திக்க வந்த நிர்வாகி அஜிதா தடுத்து நிறுத்தப்பட்டார். ஆதரவாளர்களுடன் வந்த அஜிதா தவெக அலுவலகத்துக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காததால் அஜிதா அதிருப்தி என தகவல் வெளியாகி உள்ளது. 

  • ``எதை செய்ய முடியுமோ...’’ - கனிமொழி எம்பி
    23 Dec 2025 11:40 AM IST

    ``எதை செய்ய முடியுமோ...’’ - கனிமொழி எம்பி

    மக்களுடைய தேவை என்ன என்பதை கேட்டு தெரிந்துகொண்டு, எதையெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் வாக்குறுதியாக தேர்தல் அறிக்கையில் உருவாக்க முடிவு செய்திருக்கிறோம். அதனால் எத்தனை வாக்குறுதிகள் என்ற எண்ணிக்கை என்பதெல்லாம் கணக்கு கிடையாது என கனிமொழி எம்பி கூறியுள்ளார்.

  • நாளை தவெகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
    23 Dec 2025 11:38 AM IST

    நாளை தவெகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

    சென்னை, தேனாம்பேட்டையில் செங்கோட்டையன், என்.ஆனந்த் தலைமையில் நாளை தவெக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தல் பணி, பூத் கமிட்டி பணிகள் குறித்து நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • கட்சி கரை வேட்டி அணியாததால் நிர்வாகிகளுக்கு அபராதம்
    23 Dec 2025 11:36 AM IST

    கட்சி கரை வேட்டி அணியாததால் நிர்வாகிகளுக்கு அபராதம்

    காஞ்சிபுரம்: உத்திரமேரூரில் நடந்த தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கட்சி கரை வேட்டி அணியாமல் வந்த நிர்வாகிகளுக்கு ரூ.200 அபராதம் விதித்தார் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது, இந்த அபராத தொகை மாநில மாநாட்டிற்கு செலவிடப்படும் என கூறினார்.

  • ஓ.பன்னீர் செல்வம் அவசர ஆலோசனை
    23 Dec 2025 11:33 AM IST

    ஓ.பன்னீர் செல்வம் அவசர ஆலோசனை

    அடுத்த அரசியல் நகர்வு குறித்து இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ஓ.பன்னீர் செல்வம் அவரது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்துகிறார். சென்னை வந்துள்ள தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை சந்திக்க ஓ.பன்னீர் செல்வம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  • சென்னையில் பாஜக மாநில மையக்குழு ஆலோசனை
    23 Dec 2025 11:29 AM IST

    சென்னையில் பாஜக மாநில மையக்குழு ஆலோசனை

    சட்டமன்ற தேர்தலுக்கான பாஜகவின் ஆயத்தப்பணிகள் தொடர்பாக கேட்டறிகிறார் பியூஷ் கோயல். சென்னையில் பாஜகவின் மாநில மையக்குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது. இதில் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் பங்கேற்றுள்ளார்.

1 More update

Next Story