இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-11-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 22 Nov 2025 9:14 AM IST
காஞ்சீபுரத்தில் நாளை மக்களை சந்திக்கும் விஜய்
காஞ்சீபுரம் மக்களின் வேண்டுகோளுக்காக இந்த சிறப்பு மக்கள் சந்திப்பு நடத்த இருப்பதாக த.வெ.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 22 Nov 2025 9:07 AM IST
2வது டெஸ்ட்: இந்தியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா பேட்டிங்கை தேர்வு செய்தார்
.
- 22 Nov 2025 9:05 AM IST
வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
- 22 Nov 2025 9:05 AM IST
இன்றைய ராசிபலன் (22.11.2025): பணவரவு திருப்திகரமாக இருக்கும்..!
ரிஷபம்
புதிய வாகனம் வாங்க திட்ட மிடுவீர்கள். வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை எடுத்து நற்பெயர் வாங்குவர். பிள்ளைகளிடம் சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். தேக ஆரோக்கியம் பளிச்சிடும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா










