இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-11-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 22 Nov 2025 11:09 AM IST
மேகதாது அணை விவகாரம்: விவசாயிகளின் அச்சத்தை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
உரிமைகளை தாரை வார்க்க தி.மு.க. அரசு தயாராகிக் கொண்டிருக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
- 22 Nov 2025 11:08 AM IST
மதியம் 1 மணி வரை 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
- 22 Nov 2025 11:06 AM IST
தொழிலாளர்களின் சட்டபூர்வ உரிமைகளை மறுக்கும் அறிவிக்கையை திரும்பப் பெற வேண்டும் வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
- 22 Nov 2025 10:39 AM IST
முத்தக்காட்சியில் நடிப்பது பற்றி மனம் திறந்த நடிகை கிரிஜா ஓக்
நடிகை கிரிஜா ஓக், சமீபத்தில் அளித்த பேட்டி வைரலாகி, திடீரென தேசிய அளவில் பிரபலமானார்.
- 22 Nov 2025 10:31 AM IST
நிலத்தகராறில் தி.மு.க. நிர்வாகி சுட்டுக்கொலை - போலீஸ் விசாரணை
கொலை சம்பவம் தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 22 Nov 2025 10:29 AM IST
நாளை மக்களை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்.. 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி
QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 2 ஆயிரம் பேர் மட்டுமே நிகழ்ச்சியில் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 22 Nov 2025 10:28 AM IST
38 வருவாய் கிராமங்களின் பாசனப்பரப்பை காவிரி டெல்டா பகுதியாக அறிவித்து அரசாணை வெளியீடு
கடலூர் மாவட்டம் திருமுட்டம் வட்டத்தில் உள்ள 38 வருவாய் கிராமங்கள், காவிரி டெல்டா பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- 22 Nov 2025 9:56 AM IST
‘கேப்டன் பதவியால் பெருமை’- ரிஷப் பண்ட் நெகிழ்ச்சி
இந்தியாவுக்கு வந்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கொல்கத்தாவில் நடந்த முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 30 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
- 22 Nov 2025 9:54 AM IST
சென்னை: கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி சுட்டுப்பிடிப்பு
கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி விஜயகுமார் போலீசாரால் சுட்டுப்பிடிக்கப்பட்டார்.
- 22 Nov 2025 9:52 AM IST
விபத்தில் சிக்கிய கார்: படுகாயம் அடைந்த மணமகள்.. மணமகன் எடுத்த முடிவு.. நெகிழ்ச்சி சம்பவம்
மணமகள் சென்ற கார் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதில் படுகாயமடைந்த அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
















