இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 21-12-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 21 Dec 2025 11:23 AM IST
நடிகர் ஸ்ரீனிவாசனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய சூர்யா
கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன் (வயது 69). கடந்த 48 ஆண்டுகளாக மலையாள திரையுலகில் முன்னணி கலைஞராக திகழ்ந்தவர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று காலை காலமானார். இந்நிலையில், நடிகர் ஸ்ரீனிவாசனின் உடலுக்கு நடிகர் சூர்யா நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். ஸ்ரீனிவாசனின் இறுதிச்சடங்கு இன்று நடக்கின்றது.
- 21 Dec 2025 11:19 AM IST
நெல்லையில் 15 புதிய பஸ் போக்குவரத்து சேவையை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லையிக்கு சென்றார். அங்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அரசு சார்பில் நடைபெறும் விழாவில் மொத்தம் ரூ.639 கோடியில், காயிதே மில்லத் நினைவு நூலகம் உள்ளிட்ட புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, அரசு ஆஸ்பத்திரி கூடுதல் கட்டிடம் உள்பட முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்நிலையில், நெல்லை மாவட்டத்திற்கு 15 புதிய பஸ் போக்குவரத்து சேவையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- 21 Dec 2025 11:14 AM IST
பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை நாளை நிறுத்தம்
பழனி முருகன் கோவில் ரோப்கார் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (திங்கள் கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி ரோப்கார் சேவை நிறுத்தப்படுவதாகவும், பக்தர்கள் மின்இழுவை ரெயில், படிப்பாதையை பயன்படுத்தி மலைக்கோவிலுக்கு செல்லலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 21 Dec 2025 10:44 AM IST
இளையோர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு
மாத்ரே தலைமையிலான இந்திய அணி, யூசப் தலைமையிலான பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது. இறுதிப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் மாத்ரே முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
- 21 Dec 2025 10:35 AM IST
தமிழ்நாட்டின் அமைதியை சீ்ர்குலைக்க நினைப்பது திமுக அரசுதான் என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
- 21 Dec 2025 10:33 AM IST
புத்தாண்டு மாநில சிறப்பு செயற்குழு, பொதுக்குழு கூட்டம் - ராமதாஸ் அறிவிப்பு
கூட்டத்தில் கட்சி வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் குறித்தும் 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்படும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
- 21 Dec 2025 10:31 AM IST
பிரதமர் மோடி அசாம் பயணம்: பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்...!
பிரதமர் மோடி அசாமில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
- 21 Dec 2025 10:05 AM IST
தவெக சார்பில் நாளை கிறிஸ்துமஸ் விழா - விஜய் பங்கேற்பு
தமிழக அரசியல் கட்சிகள் சார்பில் தனித்தனியாக கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் த.வெ.க சார்பில் செங்கல்பட்டு மாவட்டம். மாமல்லபுரத்தில் உள்ள 'ப்போர் பாயிண்ட்ஸ்' கன்வென்ஷன் சென்டரில் நாளை (திங்கட்கிழமை) கிறிஸ்துமஸ் விழா நடைபெறுகிறது.
- 21 Dec 2025 10:01 AM IST
ஆஷஸ் 3-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி போராடி தோல்வி
இறுதியில், 102.5 ஓவரில் இங்கிலாந்து அணி 352 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து போராடி தோல்வியடைந்து. இதன்மூலம் ஆஸ்திரேலியா அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்று ஆஷஸ் கோப்பையை தக்க வைத்துள்ளது.
மேலும் 5 போட்டிகள் என்ற தொடரில் 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது. இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 85 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா அணி சார்பில் அதிகபட்சமாக ஸ்டார்க், கம்மின்ஸ், நாதன் லயன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
- 21 Dec 2025 9:55 AM IST
பொங்கல் பரிசுத்தொகுப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார்: செந்தில்பாலாஜி
தமிழக வளர்ச்சியில் பா.ஜனதாவுக்கு அக்கறை இல்லை என்று செந்தில்பாலாஜி கூறினார்.
















