இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-12-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 17 Dec 2025 12:43 PM IST
பத்திரிக்கையாளர் சந்திப்பில் விஜயின் அரசியல் குறித்த கேள்வி?- நடிகர் கிச்சா சுதீப் பதில்
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். இவர் தற்போது இயக்குனர் கார்த்திகேயா இயக்கத்தில் மார்க் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நவீன் சந்திரா, தீப்ஷிகா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அதிரடி ஆக்சன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் வருகிற 25ந் தேதி வெளியாக உள்ளது.
- 17 Dec 2025 12:19 PM IST
தமிழ்நாடு காவல்துறையில் உருவாக்கப்பட்டுள்ள 3 புதிய சப்-டிவிஷன் மற்றும் 10 புதிய காவல் நிலையங்களை முதல்-அமைச்சர் வரும் 22ம் தேதி தொடங்கி வைக்கிறார்.
- 17 Dec 2025 12:18 PM IST
17 சதவீதம் மட்டுமே பேரிடர் நிவாரண நிதி வழங்கிய மத்திய அரசு: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
பசுமை பள்ளி வகுப்பறைகளில் வெப்பநிலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
- 17 Dec 2025 12:16 PM IST
இந்தியா வந்த மேலும் 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் - விரைவில் ராணுவத்தில் இணைப்பு...!
2வது தவணையாக எஞ்சிய 3 அப்பாச்சி தாக்குதல் ரக ஹெலிகாப்டர்கள் நேற்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் இருந்து சரக்கு விமானம் மூலம் 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்களும் உத்தரபிரதேசத்தின் ஹிண்டன் விமானப்படைத்தளத்திற்கு கொண்டு வரப்பட்டன.
- 17 Dec 2025 12:14 PM IST
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் இந்த விற்பனைக் கண்காட்சியை துவக்கி வைக்கிறார்.
- 17 Dec 2025 12:13 PM IST
சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் புதிய வசதி: நடைமேடை தடுப்பு கதவுகள் அமைப்பு
பூந்தமல்லி - போரூர் வழித்தடத்தில் 10 ரெயில் நிலையங்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் உயர்மட்ட பாலத்தில் அமைந்துள்ளது. இந்த ரெயில் நிலையங்களில் பயணிகளுக்காக புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.
- 17 Dec 2025 12:11 PM IST
மெரினா கடற்கரை பகுதிகளில் பாரம்பரிய வழித்தட திட்ட பணிகள் தீவிரம்
9 இடங்களில் கூடுதலாக கடற்கரை பகுதிகளை ரசிக்கும்படி பார்வையாளர் தளங்கள் அமைக்கப்பட உள்ளன.
- 17 Dec 2025 12:09 PM IST
தொடர் மழை.. சங்கரன்கோவிலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
தொடர் மழை காரணமாக சங்கரன் கோவிலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி 6 முதல் 10 வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
- 17 Dec 2025 11:26 AM IST
அன்புமணி ராமதாஸ் அல்ல: அன்புமணி மட்டுமே - ராமதாஸ்
தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், “பல மாதங்களுக்கு முன்பு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அன்புமணி, கட்சியின் சின்னம், பெயரை பயன்படுத்தக் கூடாது. என் பெயரையும் அவர் தரப்பினர் பயன்படுத்தக் கூடாது” என்று தெரிவித்தார்.
- 17 Dec 2025 11:23 AM IST
சென்னை கிண்டியில் பாஜக உயர்மட்டக் குழு கூட்டம்
சென்னை கிண்டியில் பாஜக உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று கூறப்படுகிற்து.
இந்த கூட்டத்தில் பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
















