இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 09-12-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 9 Dec 2025 4:17 PM IST
சையத் முஷ்டாக் அலி கோப்பை: சாய் சுதர்சன் அதிரடி சதம்.. தமிழக அணி ஆறுதல் வெற்றி
18.4 ஓவர்களில் தமிழக அணி 7 விக்கெட்டுக்கு 185 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியாக ஆடி சதமடித்த சாய் சுதர்சன் 101 ரன்களுடன் (55 பந்து, 10 பவுண்டரி, 4 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- 9 Dec 2025 4:16 PM IST
அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் ரூ.1.16 கோடி சொத்து முடக்கத்தை எதிர்த்து காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவில் அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தன் மீது அமலாகத்துறை வழக்கு பதிவு செய்வதற்கு முன்பே தனது சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டன. சொத்துக்கள் முடக்கம் செய்த போது தனக்கு எதிராக எந்த வழக்கும் நிலுவையில் இல்லை என கார்த்தி சிதம்பரம் தரப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 9 Dec 2025 4:15 PM IST
‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' திமுக பரப்புரை நாளை தொடக்கம்
சென்னை தேனாம்பேட்டையில் நாளை நடைபெறும் திமுகவினரின் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
- 9 Dec 2025 4:14 PM IST
மாதவிடாய் விடுப்பு - தற்காலிக தடை
நவ. 12-ல் தேதி கர்நாடக அரசு அறிமுகப்படுத்திய, ஆண்டுக்கு 12 நாட்கள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு அளிக்கும் கொள்கைக்கு, அம்மாநில ஐகோர்ட்டு தற்காலிக தடை விதித்துள்ளது.
தொழிலாளர் சட்டங்களில் மாதவிடாய் விடுப்பு வழங்க எந்த விதியும் இல்லை என்றும் ஆகவே அரசுக்கு அதிகாரமே இல்லை எனவும் பெங்களூரு ஹோட்டல்கள் சங்கம் உள்ளிட்ட சில நிறுவனங்கள் தரப்பு வாதத்தை ஏற்று, நீதிபதி ஜோதி தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
- 9 Dec 2025 4:11 PM IST
முதல் டி20: கில், பாண்ட்யா பிளேயிங் லெவனில் இடம்பெறுவார்களா..? கேப்டன் சூர்யகுமார் பதில்
டி20 தொடருக்கான இந்திய அணியில் காயத்தில் இருந்து மீண்டுள்ள ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, சுப்மன் கில் இடம்பெற்றுள்ளனர். இருப்பினும் அவர்கள் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. - 9 Dec 2025 4:08 PM IST
முதல் டி20 போட்டி: இந்தியா - தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
- 9 Dec 2025 4:06 PM IST
திருப்பரங்குன்றம் தொடர்பான கோர்ட்டு அவமதிப்பு வழக்கு: தலைமைச் செயலாளர் ஆஜராக உத்தரவு
திருப்பரங்குன்றம் தொடர்பான கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் தலைமைச் செயலாளர் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
- 9 Dec 2025 3:40 PM IST
திருப்பரங்குன்றம் விவகாரம்: கோவில் விவகாரங்களில் கோர்ட்டு தலையிடக்கூடாது - தமிழக அரசு
திருப்பரங்குன்றம் விவகாரம் சொத்துரிமை சார்ந்த வழக்கும்தான் என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
- 9 Dec 2025 2:45 PM IST
தீர்ப்பு பிடிக்கவில்லை என்றால் நீதித்துறைக்கு மிரட்டலா..? அண்ணாமலை கேள்வி
இந்தியா கூட்டணி, வாக்கு வங்கி அரசியல் செய்வதாக அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.
- 9 Dec 2025 2:45 PM IST
நீதிபதியை பதவி நீக்கம் செய்ய கோரும் தீர்மானக் கடிதத்தை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கனிமொழி எம்.பி. வழங்கினார்.
















