இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 09-11-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 9 Nov 2025 3:28 PM IST
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இலங்கை அணி அறிவிப்பு
இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி வருகிற 11-ம் தேதி ராவல்பிண்டியில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சரித் அசலன்கா தலைமையிலான அந்த அணியில் நிசங்கா, ஹசரங்கா, குசல் மெண்டிஸ் போன்ற முன்னணி வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.
இலங்கை அணி விவரம்:
அசலன்கா (கேப்டன்), பதும் நிசங்கா, லஹிரு உதாரா, கமில் மிஷாரா, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரமா, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, பவன் ரத்னாயக்கே, வனிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்ஷனா, ஜெப்ரி வாண்டர்சே, துஷ்மந்த சமீரா, அசித பெர்னாண்டோ, பிரமோத் மதுஷான், ஏஷன் மலிங்கா
- 9 Nov 2025 2:59 PM IST
தமிழகத்தில் 7 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
10-11-2025 மற்றும் 11-11-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி. மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
12-11-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும். இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
- 9 Nov 2025 2:33 PM IST
நாட்டில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த ஆயுத விநியோகம், சதி திட்டம்; 3 பேர் குஜராத்தில் கைது
நாட்டில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த ஆயுத விநியோகம், சதி திட்டம் தீட்டிய 3 பேர் குஜராத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
- 9 Nov 2025 1:59 PM IST
வாக்கு திருட்டை மறைக்கவே எஸ்.ஐ.ஆர்: ராகுல் காந்தி
வாக்குத் திருட்டை மூடிமறைக்கவே எஸ்ஐஆர் நடத்தப்படுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்ற ராகுல் காந்தி கூறியதாவது: ``வாக்குத் திருட்டை மறைக்கத்தான் எஸ்ஐஆர்..சில நாள்களுக்கு முன்பாக, அரியாணா வாக்குத் திருட்டு குறித்து ஒரு விளக்கக் காட்சியை நான் அளித்தேன். சுமார் 25 லட்சம் வாக்குகள்; அதாவது எட்டில் ஒன்று திருடப்பட்டதாகத் தரவு தெளிவாகக் காட்டுகிறது.இந்தத் தரவுகளை ஆராய்ந்த பிறகுதான், மத்திய பிரதேசம், மராட்டியம், சத்தீஸ்கரிலும் இதேபோல் வாக்குத் திருட்டு நடந்துள்ளதாக நினைக்கிறேன்.
இது, பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்டதாகும்.எங்களிடம் நிறைய விரிவான தகவல்கள் உள்ளன. இதுவரையில் நாங்கள் காட்டியது ஒரு சிறிய பகுதி மட்டுமே.வாக்குத் திருட்டுக்கு எதிரான பிரசாரம் தொடரும். தேர்தல் நடைமுறையில் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புக் கூறலுக்கு காங்கிரஸ் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும்’ இவ்வாறு அவர் கூறினார்.
- 9 Nov 2025 12:41 PM IST
ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என படத் தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு
- 9 Nov 2025 11:42 AM IST
எஸ்.ஐ.ஆர் குறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை: மு.க. ஸ்டாலின்
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
“நான் விசாரித்தவரையில், பொதுமக்களிடம் எஸ்.ஐ.ஆர் குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை. பல இடங்களில் பி.எல்.ஓக்கள் எனப்படும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கே புரியவில்லை எனச் சொல்கிறார்கள். எனவே, எஸ்.ஐ.ஆர் பணிகளில் மாவட்ட செயலாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார்.
- 9 Nov 2025 10:42 AM IST
காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு தொடங்கியது
தமிழக காவல்துறையில் 2ஆம் நிலை காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு நண்பகல் 12.45 மணி வரை நடைபெறுகிறது. மொத்தம் 3,644 காலிப்பணியிடங்களுக்கு 2.25 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதுகிறார்கள். 45 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. தேர்வில் முறைகேட்டைத் தடுக்க விண்ணப்பதாரரின் இடது கை விரல் ரேகை பதிவு செய்யப்படுகிறது.














