இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 06-12-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 6 Dec 2025 5:56 PM IST
திருப்பரங்குன்றம் தீபத்தூண் மீது நிரந்தரமாக விளக்கு ஏற்ற அனுமதி வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் மனு
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண் மீது நிரந்தமராக விளக்கு ஏற்ற அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மதுரையை சேர்ந்த கேகே ரமேஷ் என்பவர் மனு அளித்துள்ளார். இந்த மனுவில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில் முழுவதையும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் என்றும், கார்த்திகை தீபத்தன்று மலை முழுவதும் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
- 6 Dec 2025 5:01 PM IST
விமான டிக்கெட் கட்டண்ம்: உச்ச வரம்பு நிர்ணயம்
விமான சேவை நிறுவனங்களுக்கு 4 பிரிவுகளில் டிக்கெட் கட்டண உச்ச வரம்பை நிர்ணயித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்வோருக்கு அதிகபட்ச கட்டணமாக ரூ.18,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இண்டிகோ விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதை பயன்படுத்தி, பிற விமான நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- 6 Dec 2025 3:56 PM IST
நாஞ்சில் சம்பத்திற்கு பரப்புரை செயலாளர் பொறுப்பு
தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைந்த நாஞ்சில் சம்பத்திற்கு அக்கட்சியின் பரப்புரை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை விஜய் இன்று வெளியிட்டுள்ளார்.
- 6 Dec 2025 2:23 PM IST
பல மடங்கு உயர்ந்த விமான டிக்கெட் கட்டணம்
இண்டிகோ விமான சேவை பாதிப்பு எதிரொலி 2வது நாளாக சென்னை உள்பட முக்கிய நகரங்களில் விமான டிக்கெட் கட்டணம் பலமடங்கு உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து கோவைக்கு வழக்கமாக ரூ.5,400 கட்டணமாக இருக்கும் நிலையில், தற்போது ரூ. 57,700 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு செல்வதற்கு ரூ.6,000 ஆக இருந்த விமான டிக்கெட் கட்டணம் ரூ.18,200 ஆக உயர்ந்துள்ளது.திருச்சிக்கு ரூ.4,600 ஆக இருந்த விமான டிக்கெட் கட்டணம் ரூ. 26,700 ஆகவும் பல மடங்கு உயர்ந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
- 6 Dec 2025 1:53 PM IST
கடலோர மற்றும் உள் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
இன்று கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 6 Dec 2025 1:52 PM IST
நாகர்கோவில், கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயில்கள்
நாகர்கோவில், திருவனந்தபுரம், கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
- 6 Dec 2025 1:35 PM IST
பணமோசடி வழக்கு; அனில் அம்பானியின் ரூ. 1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்
பணமோசடி வழக்கு தொடர்பாக அனில் அம்பானியில் ரூ.9 ஆயிரம் கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை ஏற்கனவே முடக்கியுள்ளது. அனில் அம்பானியின் சொத்துக்களில் மேலும் ஆயிரத்து 120 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
- 6 Dec 2025 12:53 PM IST
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மூன்றாம் மொழியை கட்டாயமாக்குவதா? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் மூன்றாம் மொழி கற்பிக்கப்பட வேண்டும் என்ற சுற்றறிக்கையை பல்கலைக்கழக மானியக் குழு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.















