இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-12-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 4 Dec 2025 10:40 AM IST
பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் பணியிடை நீக்கம்
பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
- 4 Dec 2025 10:05 AM IST
சென்னையில் 39 விமானங்களின் சேவை ரத்து
சென்னையில் நேற்று(டிச.3) இரவில் இருந்து இன்று (டிச.4) காலை வரை 39 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரத்து செய்யப்பட்ட விமானங்களில் புறப்பாடு விமானங்கள் 19, வருகை விமானங்கள் 20 அடங்கும். விமானிகள், ஊழியர்கள் பற்றாக்குறையால் இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி நாடு முழுவதும் 200க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திடீரென விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
- 4 Dec 2025 9:43 AM IST
ஏவிஎம் சரவணன் மறைவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
அமைதியும் எளிமையுமே பண்புநலமாகக் கொண்டு எல்லோரிடமும் அன்பொழுகப் பழகியவர் ஏவிஎம் சரவணன் என்று முதல்-அமைச்சர் கூறியுள்ளார்.
- 4 Dec 2025 9:42 AM IST
தெண்டுல்கர் சாதனையை சமன் செய்த விராட் கோலி
ராய்ப்பூர் மைதானத்தில் விராட் கோலி அடித்த சதம், அவரது 53-வது சதமாகும். இதையும் சேர்த்து ஒரு நாள் கிரிக்கெட்டில் அவர் 34 இடங்களில் சதம் அடித்துள்ளார். இதன் மூலம் அதிக வெவ்வேறு இடங்களில் சதம் அடித்தவரான சச்சின் தெண்டுல்கரின் சாதனையை (இவரும் 34 இடத்தில் சதம்) சமன் செய்தார்.
- 4 Dec 2025 9:41 AM IST
தமிழக அணியின் கேப்டனாக ஜெகதீசன் நியமனம்
துணை கேப்டனாக இருந்த என்.ஜெகதீசன் எஞ்சிய போட்டிக்கான தமிழக அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- 4 Dec 2025 9:40 AM IST
இந்திய ஆக்கி அணி பயிற்சியாளர் ராஜினாமா செய்ய காரணம் என்ன ? பரபரப்பு தகவல்
இந்திய பெண்கள் ஆக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இருந்து வந்த ஹரேந்திர சிங் கடந்த திங்கட்கிழமை தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
- 4 Dec 2025 9:35 AM IST
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நசீர் ஹமீது (38 வயது) என்பவர் அமெரிக்காவின் நியூஜெர்சியில் வசித்து வந்தார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு தனது மனைவி சசிகலா மற்றும் 6 வயது மகன் அனிசை கொன்றுவிட்டு தலைமறைவானார். இதுகுறித்து அமெரிக்கா புலனாய்வு அமைப்பு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
- 4 Dec 2025 9:33 AM IST
"44 ஆண்டுகால நட்பு காலமாகிவிட்டது".. ஏவிஎம் சரவணனின் மறைவுக்கு வைரமுத்து இரங்கல்
கவிஞர் வைரமுத்து திரைப்பட தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
- 4 Dec 2025 9:32 AM IST
திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.வி.எம் சரவணன் மறைவுக்கு அன்புமணி ராமதாஸ் இரங்கல்
திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
- 4 Dec 2025 9:30 AM IST
தூயமல்லி அரிசி, கவுந்தப்பாடி நாட்டு சர்க்கரை உள்பட 9 வேளாண் பொருட்களுக்கு புவிசார் குறியீடு
41 வேளாண் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் மூலம் விண்ணப்பிக்கப்பட்டது.



















