இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 26.01.2026

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 26 Jan 2026 10:24 AM IST
குடியரசு தின விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய விருதுகள் என்னென்ன...?
77-வது குடியரசு தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது, காந்தியடிகள் காவலர் பதக்கம் உள்ளிட்ட விருதுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
- 26 Jan 2026 10:17 AM IST
தங்கம் விலை அதிரடி உயர்வு... கிராம் ரூ.15 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் - இன்றைய நிலவரம் என்ன..?
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,20,200-க்கு விற்பனையாகி வருகிறது. கிராமுக்கு ரூ.275 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15,025-க்கு விற்பனையாகி வருகிறது.
தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் தினமும் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாயும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.375-க்கும், ஒரு கிலோ ரூ.3 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- 26 Jan 2026 10:03 AM IST
“ஜி.வி.பிரகாஷின் சகோதரிதான் இந்த நடிகையா?’’ - எந்த படத்தில் நடித்திருக்கிறார் தெரியுமா?
திரையுலகில் முதலில் இசையமைப்பாளராக வந்து பின்னர் ஹீரோவாக மாறியவர் ஜி.வி.பிரகாஷ். பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். அவரது சகோதரியும் ஒரு பிரபல நடிகை என்பது உங்களுக்கு தெரியுமா?.
- 26 Jan 2026 10:01 AM IST
"நானும் அவரும்.."- நடிகர் மம்முட்டிக்கு வாழ்த்து சொன்ன கமல்ஹாசன்
நடிகர் மம்முட்டிக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்து கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.
- 26 Jan 2026 10:00 AM IST
“2-3 ஆண்டுகளில் விவாகரத்து… நண்பர்களை பார்த்து பயந்தேன்” - நடிகை திவி வாத்யா
திருமணம் குறித்த திவி வாத்யாவின் கருத்து சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. சமீபத்தில், ஒரு நிகழ்ச்சியில் திவி , திருமணம் குறித்த தனது பயத்தை வெளிப்படுத்தினார். திருமணத்தில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று தெரிவித்தார்.
- 26 Jan 2026 9:58 AM IST
டி20: 2-வது வீரர்...மாபெரும் சாதனை பட்டியலில் இணைந்த அபிஷேக் சர்மா
நேற்று நடந்த இந்தியா-நியூசிலாந்து ஆட்டத்தில் அபிஷேக் ஷர்மா 14 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
- 26 Jan 2026 9:57 AM IST
வடநாட்டு அரசியலில் வரப்போகும் திருப்பம் - ரஜினி கூறியது என்ன?
வடநாட்டு அரசியல் குறித்தும் அங்கு நேரப்போவதாக நம்பப்படும் ஒரு திருப்பம் குறித்தும் ரஜினி சொன்னதாக வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
- 26 Jan 2026 9:56 AM IST
குடியரசு தினவிழா: மெரினா கடற்கரையில் கவர்னர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றினார்
நாட்டின் 77-வது குடியரசு தினவிழா இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு சார்பில் மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெற்றது.














