இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-01-2026

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 20 Jan 2026 12:56 PM IST
தமிழகம், கேரளா அரசுகள் தொடர்ந்த வழக்கு: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம்கோர்ட்டு நோட்டீஸ்
தமிழ்நாட்டில் மணல் குவாரி முறைகேடு விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்ய டி.ஜி.பி.க்கு உத்தரவிடக்கோரிய வழக்கு மற்றும் அமலாக்கத்துறை மேற்கொண்டு வரும் எப்.ஐ.ஆர். நடவடிக்கைகள் சட்டவிரோதமானது என கேரள அரசும் 2 வழக்குகள் தொடர்ந்திருந்தது. இந்நிலையில் இந்த 3 வழக்குகளின் மீதும் அமலாக்கத்துறை, மத்திய அரசு 4 வாரங்களில் பதிலளிக்க சுப்ரீம்கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
- 20 Jan 2026 12:41 PM IST
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
2026-ம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் மெல்போர்ன் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் நெதர்லாந்தின் ஜெஸ்பர் டி ஜோங்கை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய டேனில் மெத்வதேவ் 7-5, 6-2, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
- 20 Jan 2026 12:38 PM IST
கவர்னர் பேசும்போது மைக் ஆப் செய்யப்பட்டதா? பேரவையில் என்ன நடந்தது? - சபாநாயகர் அப்பாவு விளக்கம்
அரசின் நிறை குறைகளை பேசுவதற்கு கவர்னர் அரசியல்வாதி அல்ல என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
- 20 Jan 2026 12:37 PM IST
பொங்கலுக்கு மது வணிகம் ரூ.850 கோடி: குடும்பங்களை சீரழிப்பதில் திமுக சாதனை - அன்புமணி விமர்சனம்
மது விற்பனை ஓராண்டில் 20% அதிகரிப்பதென்பது மகிழ்ச்சியளிக்கும் விஷயமல்ல என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
- 20 Jan 2026 12:36 PM IST
தமிழக சட்டசபைக் கூட்டம் 24-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் 24-ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 20 Jan 2026 11:55 AM IST
தமிழ்நாட்டுக்கான நீர் பங்கீட்டில் ஒருபோதும் சமரசம் கிடையாது - கவர்னர் உரையில் தகவல்
தமிழக சட்டசபையில் பேசிய சபாநாயகர் அப்பாவு, “சட்டசபை மரபுகளே எப்போதும் தொடரும். தேசிய கீதம் இசைப்பது தொடர்பாக கவர்னர் எனக்கு கடந்த ஆண்டே கடிதம் எழுதினார். அதற்கு என்னுடைய பதிலும் வழங்கப்பட்டுள்ளது. அவை முன்னவர் துரைமுருகனாலும் விளக்கப்பட்டது. கவர்னரின் உரை மட்டுமே அவைக் குறிப்பில் ஏறும். மற்ற எந்த நிகழ்வுகளும் அவைக் குறிப்பில் ஏறாது" என்று கூறினார்.
- 20 Jan 2026 11:50 AM IST
சட்டசபையில் கவர்னர் உரை நேரலை வராதது ஏன்? அமைச்சர் ரகுபதி பதில்
தமிழக சட்டசபையில் வழக்கமாக கவர்னர் பங்கேற்கும் நிகழ்வு நேரலை செய்யப்படும். ஆனால் இன்று கவர்னர் வெளிநடப்பு செய்யும் வரை நேரலை செய்யப்படவில்லை.
- 20 Jan 2026 11:48 AM IST
திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை உள்ளது - எடப்பாடி பழனிசாமி பேட்டி
தவறான புள்ளி விவரங்களை படிக்க மாட்டேன் என கவர்னர் கூறியதில் தவறில்லை என எடப்பாடி பழனிசாமி பேசினார்.
- 20 Jan 2026 11:09 AM IST
பிரபல பாலிவுட் நடிகர் அக்சய் குமாரின் பாதுகாப்பு வாகனம் விபத்தில் சிக்கி 2 பேர் காயம்
விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
- 20 Jan 2026 11:07 AM IST
குடியரசு தின விழா: கவர்னரின் தேநீர் விருந்து - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புறக்கணிப்பு
மூட நம்பிக்கைகளை ஊக்கப்படுத்தும் கருத்துக்களை பொது வெளியில் வெளியிட்டு மக்களை தவறாக கவர்னர் வழி நடத்த முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
















