இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-07-2025


இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-07-2025
x
தினத்தந்தி 12 July 2025 10:01 AM IST (Updated: 13 July 2025 9:39 AM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 12 July 2025 10:06 AM IST

    ஏர் இந்தியா விமான விபத்துக்கு காரணம் என்ன..? வெளியானது முதல்கட்ட அறிக்கை


    விமான விபத்து தொடர்பான 15 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட அறிக்கை இன்று (ஜூலை12ம் தேதி) நள்ளிரவு வெளியானது. இதன்படி விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து மீட்கப்பட்ட உரையாடல்களை வைத்து விசாரணை பணியகம் ஒரு அறிக்கையை தயார் செய்து வெளியிட்டு உள்ளது.

    சம்பவத்தன்று விமானம் புறப்பட்ட 32 நொடிகளில் இரண்டு என்ஜின்களும் திடீரென பழுதானதே விபத்திற்கு காரணம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  • 12 July 2025 10:04 AM IST

    இன்றைய ராசிபலன் - 12.07.2025

    துலாம்

    கடவுள் நம்பிக்கை கூடும். குலதெய்வ கோவில்களுக்குச் சென்று வருவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். அரசியல்வாதிகளுக்கு தங்கள் கட்சித் தலைவரின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள். தம்பதிகளின் ஒற்றுமை ஓங்கும். சிலருக்கு கௌரவப் பதவிகள் தேடி வரும் உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

    அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

  • 12 July 2025 10:03 AM IST

    இந்திய அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து 387 ரன்னில் ஆல்-அவுட்

    இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் நிதானமாக பேட் செய்த இங்கிலாந்து ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுக்கு 251 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 99 ரன்களுடனும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 39 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்த நிலையில் 2-வது நாளான நேற்று இங்கிலாந்து அணியினர் தொடர்ந்து பேட் செய்தனர். முதல் நாளில் விரலில் ஏற்பட்ட காயத்தால் பாதியில் வெளியேறிய இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் நேற்று பீல்டிங் செய்ய வரவில்லை. அவருக்கு பதிலாக துருவ் ஜூரெல் விக்கெட் கீப்பிங் பணியை கவனித்தார்.

    முதல் பந்திலேயே ஜோ ரூட் பவுண்டரி அடித்து தனது 37-வது சதத்தை நிறைவு செய்தார். ஆனால் இந்த ஜோடி அதிக நேரம் நிலைக்கவில்லை. ஸ்டோக்ஸ் (44 ரன்), வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பந்தில் போல்டு ஆனார். அவரது அடுத்த ஓவரில் ஜோ ரூட்டும் (104 ரன், 199 பந்து, 10 பவுண்டரி) கிளீன் போல்டானார். அவருக்கு பிறகு இறங்கிய கிறிஸ் வோக்ஸ் (0) முதல் பந்திலேயே கேட்ச் ஆனார். அப்போது இங்கிலாந்து 7 விக்கெட்டுக்கு 271 ரன்களுடன் தடுமாறியது. எப்படியும் அவர்களின் கதையை நமது பவுலர்கள் 300-க்குள் முடித்து விடுவார்கள் என்றே தோன்றியது.

    ஆனால் 8-வது விக்கெட்டுக்கு, விக்கெட் கீப்பர் ஜேமி சுமித்தும், பிரைடன் கார்சும் கைகோர்த்து ஆட்டத்தின் போக்கை மாற்றினர். சுமித் 5 ரன்னில் இருந்த போது கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஸ்லிப்பில் நின்ற ராகுல் வீணடித்தார். கண்டம் தப்பிய சுமித் அதை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

    இந்த ஜோடியை அவ்வளவு எளிதில் பிரிக்க முடியவில்லை. கார்ஸ், பும்ராவின் ஓவரில் சர்வசாதாரணமாக ரன் திரட்டினார். இதனால் சரிவில் இருந்து மீண்ட இங்கிலாந்து 400-ஐ நோக்கி பயணித்தது.

    நீண்ட நேரம் குடைச்சல் கொடுத்த இந்த ஜோடியை ஒரு வழியாக ஸ்கோர் 355-ஐ எட்டிய போது வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் பிரித்தார். அவரது பந்தில் ஜேமி சுமித் (51 ரன், 56 பந்து, 6 பவுண்டரி) மாற்று விக்கெட் கீப்பர் ஜூரெலிடம் பிடிபட்டார். மறுமுனையில் முதல்முறையாக அரைசதம் விளாசிய பிரைடன் கார்ஸ் (56 ரன், 83 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) கடைசி விக்கெட்டாக சிராஜியின் பந்தில் போல்டானார்.

    முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 112.3 ஓவர்களில் 387 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. இந்திய தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 27 ஓவர்களில் 5 மெய்டனுடன் 74 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவர் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் எடுப்பது இது 15-வது முறையாகும். முகமது சிராஜ், நிதிஷ்குமார் ரெட்டி தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தது. ஜெய்ஸ்வால் 13 ரன்னிலும், கருண் நாயர் 40 ரன்னிலும் ஸ்லிப்பில் கேட்ச் ஆனார்கள். முந்தைய டெஸ்டின் ஹீரோவான கேப்டன் சுப்மன் கில் 16 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். பொறுமையாக ஆடிய மற்றொரு தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் அரைசதம் அடித்தார்.

    ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 43 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்துள்ளது. லோகேஷ் ராகுல் 53 ரன்களுடனும் (113 பந்து, 5 பவுண்டரி), ரிஷப் பண்ட் 19 ரன்களுடனும் (33 பந்து, 3 பவுண்டரி) அவுட் ஆகாமல் உள்ளனர். இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெறும்.

1 More update

Next Story