இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 27-12-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 27 Dec 2025 4:17 PM IST
'கோர்ட் சூட்டில் நடிகர் விஜய்'
ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவிற்கு கோர்ட் சூட்டில் வந்த நடிகர் விஜய்
- 27 Dec 2025 4:00 PM IST
விபத்தில் இருவர் உயிரிழப்பு
பூந்தமல்லி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக பைக்கில் சென்ற இளைஞர்கள், லாரி மீது மோதியதில் இருவரும் உயிரிழப்பு சென்னீர்குப்பம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ், நிர்மல் குமார் இருவரும் விபத்தில் உயிரிழந்துள்ளனர். போலீசார் விசாரணை
- 27 Dec 2025 2:57 PM IST
இலவசத்தை எதிர்க்கிறேன்:சீமான்
சென்னை,
இலவசத்தை எதிர்க்கிறேன்: இலவசம் வளர்ச்சி திட்டம் கிடையாது. காசுக்கு கூடும் கூட்டம்தான் பெரிய கட்சியா? நாம் தமிழர் கட்சி எழுச்சியை திரை போட்டு மறைக்க முடியாது:.நாம் வென்றுவிடுவோம் என்ற நடுக்கம் வந்துவிட்டது. நாங்கள் முன்வைக்கும் அரசியலை அறிந்து கொள்ள உங்களுக்கு அரை நூற்றாண்டு ஆகும்.. எல்லாமே பெரியார்தான் என்பது அவர்களின் நிலைப்பாடு. திருடிய பணத்தில்தான் மக்களுக்கு பங்கு தருகிறார்கள். மும்மொழிக்கொள்கை இல்லை. ஒரு மொழிக்கொள்கைதான்- சீமான் பேச்சு
- 27 Dec 2025 1:50 PM IST
உக்ரைன் மீது ரஷியா வான்வழி தாக்குதல் - 8 பேர் படுகாயம்
உக்ரைன் மீது ரஷியா மீண்டும் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைன் தலைநகரான கீவ் நகரில் இன்று அதிகாலை ரஷிய ராணுவம் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. 16 வயது சிறுமி உள்பட மொத்தம் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
- 27 Dec 2025 12:35 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிக்கெட் இருந்தால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி!
திருப்பதி ஏழுமலையான் கோயில் சொர்க்க வாசல் தரிசனத்திற்கு டிக்கெட்டுகள் இருந்தால் மட்டுமே அனுமதி என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் 30,31 மற்றும் ஜனவரி 1ஆம் தேதிகளில் சொர்க்க வாசல் தரிசனம் நடைபெறுகிறது. டிக்கெட்டுகள் இல்லாமல் வந்து பக்தர்கள் ஏமாற வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 27 Dec 2025 12:22 PM IST
இரண்டே நாளில் முடிவுக்கு வந்த டெஸ்ட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி
இங்கிலாந்து அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான கிராலியும், பென் டக்கெட்டும் அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். இந்த தொடக்கத்தை பயன்படுத்தி, மற்ற பேட்ஸ்மேன்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இலக்கை விரைவில் விரட்டிப்பிடிக்கும் நோக்கில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் செயல்பட்டனர்.
இறுதியில் இங்கிலாந்து அணி 32.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து இலக்கை கடந்தது. இதன் மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பெத்தேல் 40 ரன்கள் எடுத்தார். நடப்பு தொடரில் முதல் வெற்றியை இங்கிலாந்து அணி பதிவுசெய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடர் 3-1 என்ற நிலையில் உள்ளது. 5 நாட்களை கொண்ட டெஸ்ட் கிரிக்கெட், இரண்டே நாளில் முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- 27 Dec 2025 11:10 AM IST
ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் நேரம் மாற்றம்
சென்னை சென்ட்ரல் - ஈரோடு இடையே ஏற்காடு எக்ஸ்பிரஸ் (22649/22650 ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் ஈரோட்டில் இருந்து புறப்படும் நேரம் வருகிற 1-ந்தேதி முதல் மாற்றப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. புதிய அறிவிப்பின்படி இந்த ரெயிலானது 1-ந்தேதி முதல் ஈரோட்டில் இருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு, காலை 4.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 27 Dec 2025 10:18 AM IST
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.110 அதிகரித்து ஒருகிராம் ரூ.13,000-க்கும், பவுனுக்கு ரூ.880 அதிகரித்து, ஒரு பவுன் 1,04,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் தங்கம், வெள்ளி விலை உயர்ந்து வருவதால் இரு பொருளும் ஏழைகளுக்கு எட்டாக் கனியாக மாறியுள்ளது.














