இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 26-12-2025


இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 26-12-2025
x
தினத்தந்தி 26 Dec 2025 9:08 AM IST (Updated: 26 Dec 2025 7:15 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • பாகிஸ்தானின் அணு ஆயுதத்தால் ஆபத்து - புதின்
    26 Dec 2025 6:07 PM IST

    பாகிஸ்தானின் அணு ஆயுதத்தால் ஆபத்து - புதின்

    பாகிஸ்தான் ஒரு ஜனநாயக நாடு அல்ல, அது அணு ஆயுதம் ஏந்திய ஒரு ராணுவக் குழு. ஆனால் மேற்கத்திய நாடுகள் ஏன் இதைப் பற்றி விமர்சிப்பதில்லை? என ரஷிய அதிபர் புதின் 2001ல் கூறிய கருத்துகள் கசிந்துள்ளன. 2001-2008 காலகட்டத்தில் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் உடன் புதின் நடத்திய ரகசியப் பேச்சுவார்த்தை ஆவணங்கள் கசிந்துள்ள நிலையில், பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் பயங்கரவாதிகளின் வசம் செல்லும் அபாயம் இருப்பதாகவும் எச்சரித்திருக்கிறார்.

  • கோவை - கேரளா எல்லையில் கண்காணிப்பு தீவிரம்
    26 Dec 2025 5:22 PM IST

    கோவை - கேரளா எல்லையில் கண்காணிப்பு தீவிரம்

    கேரளாவில் கண்டறியப்பட்ட பறவை காய்ச்சல் எதிரொலியை தொடர்ந்து கோவை - கேரளா எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வாளையாறு, வேலந்தாவளம் உள்ளிட்ட சோதனைச் சாவடிகளில் கால்நடை மருத்துவக் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கேரளாவில் இருந்து கோவை வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

  • விஜய் தமிழ்நாட்டின் தலைமை பொறுப்பை ஏற்கும் வரையில் ஓயமாட்டோம் - செங்கோட்டையன் பேச்சு
    26 Dec 2025 5:21 PM IST

    விஜய் தமிழ்நாட்டின் தலைமை பொறுப்பை ஏற்கும் வரையில் ஓயமாட்டோம் - செங்கோட்டையன் பேச்சு

    நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் தமிழ்நாட்டின் நிரந்தர முதல்-அமைச்சர். எங்களின் கூட்டத்தை கட்டுபடுத்த எவராலும் முடியாது. எங்களிடம் நியாயம் இருக்கு, நேர்மை இருக்கு. இந்த தலைவனை தமிழ்நாட்டின் தலைமை பொறுப்பை ஏற்கும் வரையில் ஓயமாட்டோம் எனதிருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் செங்கோட்டையன் பேசினார்.

  • மலேசியாவில் ஜனநாயகன் விஜய்!
    26 Dec 2025 4:27 PM IST

    மலேசியாவில் "ஜனநாயகன்" விஜய்!

    ‘ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க தனி விமானம் மூலம் மலேசியா சென்றார் நடிகர் விஜய். 'தளபதி திருவிழா' என்ற பெயரில் மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலீல் மைதானத்தில் 'ஜனநாயகன்‘ இசை வெளியீட்டு விழா நாளை (டிச.27) நடைபெறவுள்ளது.

  • பாமகவில் அன்புமணி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது -ஜி.கே.மணி
    26 Dec 2025 4:26 PM IST

    பாமகவில் அன்புமணி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது -ஜி.கே.மணி

    பாமகவில் அன்புமணி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. அவர் எப்படி என்னை நீக்க முடியும்? எல்லா அதிகாரமும் ராமதாஸிடமே உண்டு என சேலத்தில் ஜி.கே.மணி கூறியுள்ளார்.

  • 26 Dec 2025 3:13 PM IST

    திருப்பதி கோவில் வளாகத்தில் எடப்பாடி முதல்-அமைச்சராக ஆக வேண்டும் என பேனர் பிடித்து, ரீல்ஸ் வெளியிட்ட திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த அதிமுக ஐ.டி. நிர்வாகிகள் இருவர் மீது திருப்பதி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், இருவரும் முன்ஜாமின் கோரி உயர் நீதிமன்றக் கிளையை அணுகிய நிலையில் முன்ஜாமின் வழங்கியதுடன், திருப்பதி நீதிமன்றத்தில் உரிய உத்தரவாத மனுவை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

  • 26 Dec 2025 2:40 PM IST

    சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன்

    யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்வதில் போலீசாருக்கு ஏன் இவ்வளவு ஆர்வம் என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

  • கேரள வரலாற்றிலே முதல் பாஜக மேயர்
    26 Dec 2025 2:39 PM IST

    கேரள வரலாற்றிலே முதல் பாஜக மேயர்

    கேரள அரசியல் வரலாற்றில் முதல் முறையாக துணை மேயராக பாஜகவை சேர்ந்த ஆஷாநாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 101 வார்டுகள் கொண்ட திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக 50 வார்டுகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது பாஜக.

  • இஸ்லாமியர்கள் தடுத்து நிறுத்தம்
    26 Dec 2025 2:38 PM IST

    இஸ்லாமியர்கள் தடுத்து நிறுத்தம்

    பிரியாணியோடு தர்கா செல்ல திருப்பரங்குன்றம் மலையேற முயன்றபோது, 60க்கும் மேற்பட்ட கேரள இஸ்லாமியர்களை தடுத்து நிறுத்திய போலீஸ். மலை மீது அசைவ உணவு சாப்பிட தடை விதித்திருப்பதாக கூறி இஸ்லாமியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

  • ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவுக்கு சிபிஐ சம்மன்
    26 Dec 2025 2:38 PM IST

    ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவுக்கு சிபிஐ சம்மன்

    கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் டிச.29ம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட தவெக நிர்வாகிகளுக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோருக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story