தவெகவின் உண்மையான கட்டமைப்பு என்ன என்பது இன்று தெரியும்: ஆதவ் அர்ஜுனா


தவெகவின் உண்மையான கட்டமைப்பு என்ன என்பது இன்று தெரியும்: ஆதவ் அர்ஜுனா
x

மூன்று மணி நேரம் நடைபெற உள்ள கருத்தரங்கத்தில் தேர்தலை எப்படி சந்திப்பது, போன்ற பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது என்று ஆதவ் அர்ஜுனா கூறினார்.

கோவை.

தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:- அதிமுக திமுக போன்ற கட்சிகளுக்கு தான் வாக்குச்சாவடி முகவர்கள் அதிக அளவில் இருக்கும். தமிழக வெற்றி கழகத்தின் உண்மையான கட்டமைப்பு என்ன என்பது இன்று முழுமையாக தெரியவரும். மூன்று மணி நேரம் நடைபெற உள்ள இந்த கருத்தரங்கத்தில் தேர்தலை எப்படி சந்திப்பது, போன்ற பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

மக்கள் பிரச்சனை குறித்தும், இப்போது இருக்கக்கூடிய ஆட்சியில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் மக்களோடு எப்படி சேர்வது என்பது குறித்தும் விஜய் சொன்னது போல மக்களோடு சேர் மக்களோடு வாழ் என்ற அடிப்படையில் மக்களிடம் செல்வதற்கான அரசியல் பயிற்சி அரங்கம் இன்று நடைபெறுகிறது.

அதிமுக திமுக என்ற இரண்டு பெரிய கட்சிக்கு மத்தியில் மூன்றாவது கட்சியில் முதன்மைக் கட்சி என்பது வருகின்ற தேர்தலில் தெரியவரும். அதற்கான முதல் நாளாக இன்றைய நாளை கருதுகிறேன். முறையான கருத்தரங்க அட்டவணைகளை வாக்குச்சாவடி முகவர்களுக்கு கொடுத்திருக்கிறோம். கருத்தரங்கம் முடிந்தபின் முறையாக அனைத்து தகவல்களையும் ஊடகத்திற்கு தருகிறோம். தமிழகம் முழுவதும் உள்ள 69 ஆயிரம் வாக்குச்சாவடி முகவர்களுக்கும் பயிற்சி அளிக்க உள்ளோம்.3 இலட்சம் நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்க உள்ளோம்" என்றார்.

1 More update

Next Story