தமிழக அரசின் தொல்குடியினர் புத்தாய்வுத் திட்டம் – விண்ணப்பங்கள் வரவேற்பு


தமிழக அரசின் தொல்குடியினர் புத்தாய்வுத் திட்டம் – விண்ணப்பங்கள் வரவேற்பு
x
தினத்தந்தி 12 Nov 2025 6:37 PM IST (Updated: 12 Nov 2025 6:38 PM IST)
t-max-icont-min-icon

திட்டத்திற்கான நெறிமுறைகளை இவ்விணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“இளங்கலை / முதுகலை / முனைவர் பட்டம் / முனைவர் பட்ட மேலாய்வாளர் போன்ற வல்லுநர்களின் திறமைகளை பயன்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு “தொல்குடியினர் புத்தாய்வுத் திட்டம்” என்ற திட்டத்தினை 2024-2025 ஆம் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தகுதி பெற மாணாக்கர்களின் குடும்ப ஆண்டு வருமான வரம்பு ரூ.8.00 லட்சத்திற்குள் இருத்தல் வேண்டும் மற்றும் மாணவர்கள் தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியினர் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும்.

இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு மாதம் ரூ.10,000 வீதம் (6 மாதத்திற்கும்) முனைவர் பட்டம்/முனைவர் பட்ட மேலாய்வாளர்களுக்கு மாதம் ரூ.25,000 வீதம் (3 வருடத்திற்கும்) உதவித்தொகையாக வழங்கப்படும்.

2025-2026 ஆம் கல்வியாண்டில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்க புதிய இணையதளம் “fellowship.tntwd.org.in” உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்திற்கான நெறிமுறைகளை இவ்விணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். 2025 – 2026 ஆம் கல்வியாண்டிற்கு தொல்குடியினர் புத்தாய்வுத் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் 12.11.2025 நாளில் இருந்து 12.12.2025 நாள்வரை இணையதளம் மூலம் வரவேற்கப்படுகின்றன. மாணவர்கள் மேற்காணும் திட்டத்தினை தவறாது பயன்படுத்திக்கொள்ளுமாறு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story