திருநெல்வேலி: கரகாட்ட நிகழ்ச்சியில் தகராறு செய்து தாக்குதல்- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை


திருநெல்வேலி: கரகாட்ட நிகழ்ச்சியில் தகராறு செய்து தாக்குதல்- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
x

களக்காடு அருகே பத்மநேரி கிராமத்தில் கரகாட்ட நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது வெளியூரிலிருந்து வந்த நபர் ஒருவர் விரும்பத்தகாத செயலில் ஈடுபட்டுள்ளார்.

திருநெல்வேலி

திருநெல்வலேி மாவட்டம், களக்காடு அருகே உள்ள பத்மநேரி கிராமத்தில் நேற்று இரவு நடைபெற்ற ஒரு திருவிழாவின்போது, வெளியூரிலிருந்து வந்த நபர் ஒருவர், கரகாட்ட நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது விரும்பத்தகாத செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை எதிர்த்து உள்ளூர் நபர்கள் அவரை அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர்.

இதனையடுத்து இன்று அதிகாலையில் அடையாளம் தெரியாத 2 பேர் பத்மநேரி கிராமத்திற்கு வந்து, திருவிழா முடிந்து ஓய்வில் இருந்த ஊர் நபர்களை தாக்கியுள்ளனர். இதில் 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரகாட்ட நிகழ்ச்சியின்போது நடந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக இத்தாக்குதல் நடைபெற்றுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

1 More update

Next Story