கள்ளக்காதலி திடீரென விலகியதால்...ஆத்திரத்தில் டிரைவர் செய்த செயல்


கள்ளக்காதலி  திடீரென விலகியதால்...ஆத்திரத்தில் டிரைவர் செய்த செயல்
x

ரமேஷ்குமாருக்கும், 39 வயது பெண்ணுக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு கள்ளக்காதல் ஏற்பட்டது.

மேட்டுப்பாளையம்,

கோவை மாவட்டம், அன்னூர் அருகே நல்லி செட்டிபாளையத்தில் வடமாநிலத்தை சேர்ந்த 39 வயது பெண் வசித்து வருகிறார். இவரது கணவர் இறந்து விட்டதால் கல்லூரி படித்து வரும் தனது 2 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே ரமேஷ்குமார் (34) என்பவர் வசித்து வருகிறார். டிரைவரான இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.

ரமேஷ்குமாருக்கும், 39 வயது பெண்ணுக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு கள்ளக்காதல் ஏற்பட்டது. இதை அறிந்த ரமேஷின் மனைவி அன்னூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் கள்ளக்காதல் ஜோடியை எச்சரித்து அனுப்பி வைத்தனர். அந்த பெண் ரமேஷ்குமாருடனான உறவை துண்டித்து வேறு இடத்திற்கு குடிபெயர்ந்தார்.

நேற்று அந்த பெண் அச்சம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த ரமேஷ், அந்த பெண்ணிடம், தன்னுடன் தொடர்ந்து பழகுமாறு வலியுறுத்தினார். அதற்கு அந்த பெண், மறுப்பு தெரிவித்து, போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து விடுவேன் என கூறினார். இதனால் கோபமடைந்த ரமேஷ்குமார், அந்த பெண்ணை தகாத வார்த்தையால் திட்டி தாக்கினார்.

பின்னர் மண் எண்ணை கேனை எடுத்து தனது தலையில் ஊற்றிக் கொண்டு, என்னிடம் பேசவில்லை என்றால் தீக்குளித்து தற்கொலை 'செய்து கொள்வேன் என்று மிரட்டினார். இதுகுறித்து அந்த பெண் அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரமேஷ் குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ரமேஷ் குமார் தனது கையில் வைத்திருந்த தீப்பெட்டியை எடுத்து, என் அருகில் வந்தால் என் மீது தீ வைத்து கொண்டு உங்கள் அனைவரையும் கட்டி பிடித்து கொன்று விடுவேன் என போலீசாரையும், அந்த பெண்ணையும் மிரட்டினார். இதனையடுத்து போலீசார் ரமேஷ் குமாரை சுற்றி வளைத்து பிடித்து, கைது செய்தனர்.

1 More update

Next Story