ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி தொடர்ந்த வழக்கு - சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு


The case against Joy Christilda has been dismissed
x
தினத்தந்தி 7 Jan 2026 11:04 AM IST (Updated: 7 Jan 2026 1:11 PM IST)
t-max-icont-min-icon

தனக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்க கோரி மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு தொடர்ந்திருந்தார்.

சென்னை,

பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நீதிமன்றத்திலும் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜாய் கிரிசில்டா சமீபத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தை மாதம்பட்டி ரங்கராஜுடையதுதான் என்றும், இதனை நிரூபிக்க டி.என்.ஏ. பரிசோதனைக்கும் தயார் என்றும் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது. தனக்கு எதிராக அவதூறு பரப்ப ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரி மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்ந்த வழக்கில் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

1 More update

Next Story