போராட்டம் அறிவித்த டாஸ்மாக் பணியாளர்கள் - அமைச்சருடன் நாளை பேச்சுவார்த்தை


போராட்டம் அறிவித்த டாஸ்மாக் பணியாளர்கள் - அமைச்சருடன் நாளை பேச்சுவார்த்தை
x

பேச்சுவார்த்தைக்கு பிறகு டாஸ்மாக் பணியாளர்களின் போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட உள்ளது.

சென்னை,

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தனர். இது தொடர்பாக தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் முத்துசாமி பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த நிலையில் மீண்டும் அமைச்சர் முத்துசாமியுடன் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அமைச்சரின் பேச்சுவார்த்தைக்கு பிறகு டாஸ்மாக் பணியாளர்களின் போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநில தலைவர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story