தமிழ்நாடு, பீகார் அல்ல: பிரதமர் மோடி எத்தனை முறை வந்தாலும் எதுவும் செய்ய முடியாது - திருச்சி சிவா எம்.பி. பேட்டி


தமிழ்நாடு, பீகார் அல்ல: பிரதமர் மோடி எத்தனை முறை வந்தாலும் எதுவும் செய்ய முடியாது - திருச்சி சிவா எம்.பி. பேட்டி
x

தமிழ்நாடு இதுவரை காணாத வளர்ச்சியை கண்டு கொண்டிருப்பதை மக்கள் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று திருச்சி சிவா எம்.பி. கூறியுள்ளார்.

கடலூர்,

சென்னையில் இருந்து திருச்சிக்கு சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் திருச்சி சிவா எம்.பி. பயணம் செய்தார். கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் காலை 11.30 மணி அளவில் வந்த அவரை மாநகர செயலாளர் ராஜா தலைமையிலான தி.மு.க.வினர் வரவேற்றனர். அப்போது திருச்சி சிவா எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டுக்கு தேர்தல் நேரங்களில் பலமுறை பிரதமர் மோடி வந்து சென்றிருக்கிறார். தேர்தல் முடிவும் அப்படிதான் நமக்கு வெளிப்படுத்தியது. நாங்கள் ஏற்கனவே நாடாளுமன்றத்திலும் சொல்லி இருக்கிறோம். அவர் எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாடு தமிழ்நாடு தான். இது திராவிட இயக்கத்தின் ஆழமான வேர்கள் ஊறிய பகுதி. இயன்றவரை முயல்கிறார்கள். இங்கு வரக்கூடாது என்று யாரும் சொல்லக்கூடாது. பிரதமர் வரட்டும், தாராளமாக செல்லட்டும். எங்களுடைய கடமையை நாங்கள் ஆற்றிக் கொண்டிருக்கிறோம்.

தமிழ்நாடு இதுவரை காணாத வளர்ச்சியை கண்டு கொண்டிருப்பதை மக்கள் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். பீகார் வெற்றியை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பா.ஜனதா ஆட்சியை பிடிக்க முயற்சி செய்வதாக கேட்கிறீர்கள். எல்லா இடங்களிலும் முயற்சி செய்யலாம். கூடாது என்று யாரும் சொல்ல முடியாது. ஆனால் தமிழகத்தில் எதுவும் செய்ய முடியாது. தமிழ்நாடு பீகார் அல்ல. காங்கிரஸ், விஜய்யுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக கேட்கிறீர்கள். யூகமான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story