வைகை அணையில் இருந்து 8 நாட்களுக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு

மொத்தம் 450 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.
சென்னை,
வைகை அணையில் இருந்து 8 நாட்களுக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“வைகை அணையில் இருந்து சிவகங்கை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு கிருதுமால் உப வடிநிலத்திற்கு (கிருதுமால் நதி) குடிநீர் தேவைக்காக சிறப்பு நிகழ்வாக வைகை அணையில் உள்ள இருப்பு மற்றும் எதிர் நோக்கும் நீர்வரத்து ஆக மொத்தம் 2,008 மில்லியன் கனஅடி நீரில், வருகின்ற 05.12.2025 முதல் 8 நாட்களுக்கு வினாடிக்கு 650 கனஅடி வீதம் மொத்தம் 450 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






