கோவையில் இருந்து சேலம் வழியாக ராஜஸ்தானுக்கு சிறப்பு ரெயில்


கோவையில் இருந்து சேலம் வழியாக ராஜஸ்தானுக்கு சிறப்பு ரெயில்
x
தினத்தந்தி 3 April 2025 9:36 AM IST (Updated: 3 April 2025 11:35 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் இருந்து வருகிற 10-ந் தேதி முதல் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

கோவை,

கோடை விடுமுறையையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக ெரயில்வே நிர்வாகம் முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ெரயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக கோவை - பகத் கி கோதி (ஜோத்பூர் ராஜஸ்தான்) இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது,

அதன்படி கோவை - பகத் கி கோதி வாராந்திர சிறப்பு ரெயில் (06181) வருகிற 10-ந் தேதி முதல் ஜூலை மாதம் 3-ந் தேதி வரை வியாழக்கிழமைகளில் கோவையில் இருந்து அதிகாலை 2.30 மணிக்கு புறப்பட்டு திருப்பூர், ஈரோடு வழியாக அதிகாலை 5.15 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 5.20 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக சனிக்கிழமை காலை 11.30 மணிக்கு பகத் கி கோதி ரெயில் நிலையம் சென்றடையும்.

இதேபோல் மறு மார்க்கத்தில் இயக்கப்படும் பகத் கி கோதி - கோவை வாராந்திர சிறப்பு ரெயில் (06182) வருகிற 13-ந் தேதி முதல் ஜூலை 6-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமையில் பகத் கி கோதி ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக புதன்கிழமை காலை 5.12 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 5.15 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர் வழியாக காலை 9.30 மணிக்கு கோவை சென்றடையும் என்று சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story