தீபாவளி பண்டிகையையொட்டி திருவண்ணாமலை-ஆந்திரா இடையே சிறப்பு ரெயில்

பயணிகளின் வசதிக்காக தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பயணிகளின் வசதிக்காக தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
அதன்படி, திருவண்ணாமலையில் இருந்து ஆந்திர மாநிலம் நரசாபூருக்கு அடுத்த மாதம் 2, 9, 23 மற்றும் நவம்பர் 6, 20, 27 ஆகிய தேதிகளில் சிறப்பு ரெயில் (வண்டி எண்-07220) இயக்கப்படுகிறது. அதே போல, நரசாபூரில் இருந்து திருவண்ணாமலைக்கு அடுத்த மாதம் 1, 8, 22 மற்றும் நவம்பர் 5, 19, 26 ஆகிய தேதிகளில் சிறப்பு ரெயில் (07219) இயக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story