பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள்: 6-ஆம் தேதி முக்கிய ஆலோசனை


பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள்:  6-ஆம் தேதி முக்கிய ஆலோசனை
x
தினத்தந்தி 3 Jan 2026 11:57 AM IST (Updated: 3 Jan 2026 12:18 PM IST)
t-max-icont-min-icon

சுமார் 1,600 பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

சென்னை,

பொங்கல் பண்டிகை வரும் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் வெளியூர் மக்கள் பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவது வழக்கம். பொங்கல் பண்டிகையையொட்டி பேருந்து மற்றும் ரயில்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன. பயணிகள் நலன் கருதி பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அந்த வகையில் பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான முக்கிய ஆலோசனைக் கூட்டம் வரும் 6 ஆம் தேதி நடைபெறுகிறது. சுமார் 1,600 பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க திட்டமிட்டுள்ளதால் சிறப்பு பேருந்துகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வேயும் சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

1 More update

Next Story