தெற்கு ரயில்வேயின் புதிய முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர் பதவியேற்பு

ரெயில்வே பாதுகாப்புப் படையில் பல்வேறு பதவிகளில் கே.அருள் ஜோதி பணியாற்றியுள்ளார்.
சென்னை,
தெற்கு ரயில்வேயின் ரெயில்வே பாதுகாப்புப் படையின் முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையராகவும், இன்ஸ்பெக்டர் ஜெனரலாகவும், முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையராகவும் கே.அருள் ஜோதி இன்று பதவியேற்றுள்ளார். முன்னதாக ஜூலை 31-ந்தேதி(நேற்று) ஜி.எம்.ஈஸ்வர ராவ் பணி ஓய்வு பெற்றதை தொடர்ந்து, கே.அருள் ஜோதி இன்று பதவியேற்றுள்ளார்.
கடந்த 1995-ம் ஆண்டு இந்திய ரெயில்வே பாதுகாப்புப் படை (IRPFS) பிரிவின் அதிகாரியாக பணியில் சேர்ந்த கே.அருள் ஜோதி, வடக்கு எல்லைப்புற ரெயில்வே, ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தொழிற்சாலை/சென்னை, கிழக்கு ரெயில்வே, கிழக்கு மத்திய ரெயில்வே மற்றும் பிற மண்டலங்களில் ரெயில்வே பாதுகாப்புப் படையில் பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.
குறிப்பாக, 2019-2020 கொரோனா காலகட்டத்தில் தெற்கு ரெயில்வேயின் டி.ஐ.ஜி.யாக பணியாற்றிய இவர், 503 ஷ்ராமிக் சிறப்பு ரெயில்கள் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் பணியில் ஆர்.பி.எப். குழுக்களுக்கு தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.