எஸ்.ஐ. எழுத்து தேர்வு: தூத்துக்குடியில் 3,584 பேர் எழுதினர்


எஸ்.ஐ. எழுத்து தேர்வு: தூத்துக்குடியில் 3,584 பேர் எழுதினர்
x

தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்.ஐ. எழுத்து தேர்வு நடைபெற்ற மையங்களுக்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சென்னை ரெயில்வே போலீஸ் ஐ.ஜி. பாபு நேரில் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 2025-ம் ஆண்டிற்கான நேரடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு இன்று (21.12.2025) தூத்துக்குடி மாவட்டத்தில் பி.எம்.சி மெட்ரிகுலேசன் மேல்நிலை பள்ளி, வ.உ.சி. கல்லூரி, கிரேஸ் பொறியியல் கல்லூரி, காமராஜ் கல்லூரி ஆகிய 4 தேர்வு மையங்களில் நடைபெற்றது.

மேற்சொன்ன தேர்வு மையங்களுக்கு இன்று சென்னை ரெயில்வே காவல்துறை தலைவர் பாபு மற்றும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேரடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எழுத்து தேர்வில் மொத்தம் 5,146 விண்ணப்பதாரர்களில் 2,756 ஆண் விண்ணப்பதாரர்கள், 828 பெண் விண்ணப்பதாரர்கள் என மொத்தம் 3,584 விண்ணப்பதாரர்கள் இன்று தேர்வு எழுதியது குறிப்பிடத்தக்கது. மீதம் உள்ள 1,562 பேர் தேர்வு எழுதவில்லை.

1 More update

Next Story