மதவெறி அரசியலை முறியடிக்கும் வலிமை மதச்சார்பற்ற சக்திகளுக்கு உண்டு: சு.வெங்கடேசன் எம்.பி.

இந்துத்துவா மதவெறி அரசியலை எதிர்கொள்ள நிமிர்ந்து நிற்போம் என்று சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
சென்னை,
கார்த்திகை தீபத்திருநாள் திருவண்ணாமலை, ஆறுபடை வீடுகள் உள்பட அனைத்து கோவில்களிலும் நடத்தப்படும் பாரம்பரிய திருவிழா. மலைக்கோவில்களில் தீபத்தூணில் தீபம் ஏற்றியவுடன் சுற்றுப்புறங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றுவது வழக்கம்.
அதன்படி, திருப்பரங்குன்ற மலை தீபம் இந்த ஆண்டு பாரம்பரியமான மலை உச்சி தீபத்தூணில் தீபம் ஏற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
கார்த்திகை தீபத்தை கலவர தீபமாக மாற்ற மதவெறி சக்திகள் எல்லாவகையிலும் முயலுகிறார்கள். மதவெறி அரசியலை எந்த நாற்காலியில் அமர்ந்து அமல்படுத்தினாலும் அதை முறியடிக்கும் வலிமை தமிழ்நாட்டின் மதச்சார்பற்ற சக்திகளுக்கு உண்டு. இந்துத்துவா மதவெறி அரசியலை எதிர்கொள்ள குன்றென நிமிர்ந்து நிற்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






