கச்சத்தீவை மீட்க கோரும் தீர்மானம்: சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிகிறார்

கோப்புப்படம்
கச்சத்தீவை மீட்க கோரும் தீர்மானத்தை சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிகிறார்.
கச்சத்தீவை மத்திய அரசு மீட்க கோரும் தீர்மானத்தை சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிகிறார்.
தமிழ்நாடு மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை நிலைநாட்டிடவும், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் அனைத்து இன்னல்களையும் போக்கவும் கச்சத்தீவை மீண்டும் பெறுவதே நிரந்தரத் தீர்வாக அமையும்.
இதை கருத்தில் கொண்டு, இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து கச்சத்தீவை திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்; அரசுமுறைப் பயணமாக இலங்கை செல்லும் பிரதமர் இலங்கை அரசுடன் பேசி, அங்கு சிறையில் வாடும் தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்து மீட்டுக்கொண்டு வரவேண்டும் என்று அந்தத் தீர்மானத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துகிறார்.
இந்த தீர்மானத்தில் சட்டமன்ற கட்சியினர் விவாதித்த பிறகு, குரல் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படும்.