த.வெ.க.வில் இணைந்த செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த ரஜினிகாந்த்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்திடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர்.
சென்னை,
கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த், தனது மனைவி லதா, மகள் ஐஸ்வர்யா ஆகியோருடன் கோவாவுக்கு புறப்பட்டு சென்றார்.
இதற்காக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:- ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. இன்னும் சிறிது நாட்கள் படப்பிடிப்பு உள்ளது. வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவித்துள்ளார்கள். அதற்காக சென்று கொண்டு இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவரிடம் நிருபர்கள், சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து கேட்டதற்கு, “எல்லாம் உங்களுடைய ஆதரவு” என பதில் அளித்தார். மேலும் அவரிடம், அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்து இருப்பது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, ரஜினிகாந்த் பதில் அளிக்க மறுத்து விட்டார்.






