பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை: போலீஸ்காரர் பணி நீக்கம்


பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை: போலீஸ்காரர் பணி நீக்கம்
x

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து குணாவை கடந்த மாதம் 30-ந் தேதி கைது செய்தனர்.

நாகை

நாகை அருகே தேமங்கலம் பகுதியை சேர்ந்தவர் குணா (வயது 37). இவர், திட்டச்சேரி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவர் பிளஸ்-2 மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து குணாவை கடந்த மாதம்(அக்டோபர்)30-ந் தேதி கைது செய்தனர். இதைதொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் குணா நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டார்.

1 More update

Next Story