பாமக உரிமை கோரல் விவகாரம்: உரிமையியல் நீதிமன்றத்தை அணுக ராமதாஸ்க்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு


பாமக உரிமை கோரல் விவகாரம்: உரிமையியல் நீதிமன்றத்தை அணுக ராமதாஸ்க்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 4 Dec 2025 1:06 PM IST (Updated: 4 Dec 2025 5:33 PM IST)
t-max-icont-min-icon

ஆவணங்களின் அடிப்படையில்தான் அன்புமணி பா.ம.க தலைவராக ஏற்கிறோம் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

புதுடெல்லி,

பாமக தலைவராக ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதை அங்கீகரிக்க வேண்டும் என பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஜி.கே.மணி, அருள் உள்ளிட்டோர் அளித்த மனுவை, தலைமை தேர்தல் கமிஷன் நிராகரித்துள்ளது. அதேநேரம், பா.ம.க., தலைவராக, வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் வரை அன்புமணி தொடர்வார் என்ற பொதுக்குழு தீர்மானத்தை, தேர்தல் கமிஷன் அங்கீகரித்துள்ளது. அதனால், பா.ம.க., பெயர், கொடி, சின்னம் ஆகியவை, அன்புமணி தலைமையிலான கட்சிக்கு சொந்தமாகியுள்ளன.

இதை எதிர்த்து, ராமதாஸ் தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அன்புமணி, ராமதாஸ் ஆகிய இருதரப்பு தனது வாதங்களை முன்வைத்தது.

ராமதாஸ் தரப்பு வாதம்

* பல எம்.எல்.ஏக்கள் இருந்த நிலை மாறி, ஒற்றை இலக்கமாக மாறியதற்கு அன்புமணியே காரணம்.

* தனது தந்தையையே அன்புமணி வெளியேற்றிவிட்டார்

அன்புமணி தரப்பு வாதம்

*மருத்துவர் ராமதாஸுக்கு 90 வயதாகிவிட்டது. கட்சி என்னுடன் தான் உள்ளது

*தங்களை பாமக என ராமதாஸ் தரப்பு கூறவே முடியாது. அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவும் நீதிமன்றத்தை தவறாக வழி நடத்தும் வகையிலேயே உள்ளது

*கட்சி யாருக்கு என உரிமை கோருவதால், உரிமையியல் வழக்கு மட்டுமே தொடர முடியும்.

நீதிபதி

ஏ.பி. படிவங்களில் இருதரப்பும் கையெழுத்திட்டால் தேர்தல் ஆணையம் என்ன செய்யும்? தேர்தலின்போது வேட்பாளர்களை அங்கீகரித்து யார் கையெழுத்துடுவதை தேர்தல் ஆணையம் ஏற்கும்? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

தேர்தல் ஆணையம் தரப்பு பதில்

* அன்புமணி தலைவர் இல்லையென்றால் அதற்கான உரிய ஆவணங்களுடன் ராமதாஸ் தரப்பு அணுகலாம்.

* கட்சியினரிடையேயான பிரச்சினையில், சுயாதீன அமைப்பான தேர்தல் ஆணையத்தை குறைகூறக்கூடாது.

* இரு தரப்பு பிரச்சினை இருந்தால் பாமக சின்னம் முடக்கப்படும்

* எங்களிடம் உள்ள ஆவணங்களின்படி, அன்புமணி தலைவராக இருப்பதாக நாங்கள் தகவல் அனுப்பினோம்.

* தற்போது இதுதான் நிலை, அதில் பிரச்சினை எனில் அவர்கள் உரிமையியல் நீதிமன்றத்தை நாடலாம்.

* ராமதாஸ் தரப்பு கட்சியை உரிமை கோரினால் குறைந்த பட்சம் ஆவணங்களை அவர்கள் கொண்டு வர வேண்டும்.

* குறிப்பாக நீதிமன்ற உத்தரவை பெற்று இந்த விவகாரத்தை அணுக வேண்டும்.

* கட்சிக்கு உரிமைகோரும் ராமதாஸ் தரப்பு உரிய ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.

“இரு தரப்பும் பிரச்சனைக்குரியதாக இருந்தால் தேர்தல் ஆணையம் படிவம் A மற்றும் படிவம் B-யில் இரு தரப்பு கையெழுத்து போடுவதை ஏற்காமல், சின்னமும் முடக்கி வைக்கப்படும் என தேர்தல் ஆணையம் பதில் அளித்தது.

இதனைதொடர்ந்து, இருதரப்பும் இணைந்து தங்களுக்கானவற்றை செய்துகொள்வதிலும் அனுமதிப்பதிலுமே உள்ளது. அங்கீகரிக்கப்படாத கட்சியின் உரிமை கோரல் விவகாரத்தில் ஒரு சாரார் கருத்தை பெற்று கடிதங்களின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க முடியாது. அங்கீகரிக்கபடாத கட்சிகளின் உள்விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது.

பாமக உரிமை கோரல் விவகாரத்தில் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம். போலி ஆவணம் அளித்து பாமகவை அபகரித்ததாக அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தது டெல்லி ஐகோர்ட்டு.

1 More update

Next Story