குடும்ப ஆட்சி செய்யும் தி.மு.க.வை விரட்டியடித்து 2026-ம் ஆண்டில் மக்கள் ஆட்சி மலரும் - நயினார் நாகேந்திரன்

மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி ஊழல் நடந்திருப்பதை கண்டித்து, பாஜக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது,
மதுரை,
தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி ஊழல் நடந்திருப்பதை கண்டித்தும், திமுக அரசின் உலகளாவிய ஊழல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், போதைப்பொருள் விற்பனையால் சீரழிந்து கிடக்கும் தமிழ்நாட்டை மீட்க வேண்டும் என்றும், மதுரை மாநகர் பாஜக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது,
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுது, குடும்ப ஆட்சி செய்யும் திமுகவை விரட்டியடித்து. 2026 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் மக்கள் ஆட்சி மலரும் என்பதை உறுதியளித்தேன்.
இந்த நிகழ்வில், தமிழ்நாடு பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன், மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கப் பெருமாள், மதுரை நகர பாஜக தலைவர் மாரி சக்கரவர்த்தி, சிவகங்கை மாவட்ட பாஜக தலைவர் பாண்டிதுரை துரைராஜ், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் கு.சிவலிங்கம், திருநெல்வேலி வடக்கு மாவட்ட தலைவர் முத்துபலவேசம், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் மற்றும் நூற்றுக்கணக்கான பாஜக தொண்டர்களும் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.