தமிழகத்தில் தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் - குடியுரிமை அதிகாரிகள் நடவடிக்கை


தினத்தந்தி 25 April 2025 3:00 AM IST (Updated: 25 April 2025 3:00 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் எத்தனை பாகிஸ்தானியர்கள் தங்கி உள்ளனர் என்ற விவரத்தை குடியுரிமை அதிகாரிகள் வெளியிடவில்லை.

சென்னை,

காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானுடனான அனைத்து உறவையும் இந்தியா துண்டித்துள்ளது. இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் பணி தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டைவிட்டு வெளியேற பாகிஸ்தானியர்கள் யாரேனும் மறுத்தால் போலீஸ் உதவியுடன் அவர்களை வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று குடியுமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் எத்தனை பாகிஸ்தானியர்கள் தங்கி உள்ளனர் என்ற விவரத்தை குடியுரிமை அதிகாரிகள் வெளியிடவில்லை.

1 More update

Next Story