சாலையில் மாடுகளை சுற்றித்திரிய விட்டால் உரிமையாளர்களுக்கு அபராதம் - நெல்லை மாநகராட்சி


சாலையில் மாடுகளை சுற்றித்திரிய விட்டால் உரிமையாளர்களுக்கு அபராதம் - நெல்லை மாநகராட்சி
x

நெல்லை மாநகராட்சி மைய அலுவலகத்தில் நேற்று கால்நடை வளர்ப்போருடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி

நெல்லை,

நெல்லை மாநகராட்சி ஆணையாளர் மோனிகா ராணா உத்தரவுப்படி, மாநகராட்சி மைய அலுவலகத்தில் நேற்று கால்நடை வளர்ப்போருடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. சுகாதார அலுவலர் சாகுல் ஹமீது தலைமை தாங்கினார்.

அப்போது அதிகாரிகள் பேசுகையில், நெல்லை மாநகர பகுதியில் கால்நடை வளர்ப்போர் தங்களது ஆடு, மாடுகளை தொழுவத்தில் பராமரிக்க வேண்டும். பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக ரோடுகளில் சுற்றித் திரிய விடக்கூடாது.

இதை மீறி ரோட்டில் சுற்றித்திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு ஒரு மாட்டிற்கு ரூ.5 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்படும். அபராதம் கட்டாவிட்டால், பிடிக்கப்படும் மாடுகள் கோசாலையில் ஒப்படைக்கப்பட்டு பராமரிப்பு செலவுடன் அபராதம் விதிக்கப்பட்டு தொடர்ந்து போலீசார் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

இதில் கால்நடை வளர்ப்போர் பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story