“எந்தக் கொம்பனாலும் தி.மு.க. இயக்கத்தை தொட முடியாது..” - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஜனநாயகத்தை காக்க எந்த தியாகத்தையும் செய்ய தி.மு.க.வினர் தயாராக இருப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னையில் திருமண விழா ஒன்றில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
SIR பணிகளை எதிர்த்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி, வழக்கு தொடர்ந்திருக்கிறோம். சட்ட போராட்டம் ஒருபுறம் நடந்தாலும், வாக்காளர் திருத்த பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன, அதை கவனிக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது.
இன்றைக்கு யார் யாரோ கிளம்பி தி.மு.க.வை அழித்துவிடலாம், ஒழித்து விடலாம் என்று கனவு காண்கிறார்கள், எந்தக் கொம்பனாலும் இந்த இயக்கத்தை தொட முடியாது. ஜனநாயகத்தை காக்க எந்த தியாகத்தையும் செய்ய தி.மு.க.வினர் தயாராக இருக்கின்றனர்.
இளம் தலைவர் ராகுல்காந்தி SIR-க்கு எதிராக பெரிய போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். கர்நாடகா, அரியானா பகுதிகளில் நடந்த வாக்குத் திருட்டை ஆதாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறார். அப்படி ஒரு நிலை தமிழ்நாட்டில் நடக்கவிடக் கூடாது. வரும் முன் காப்பது நமது கடமை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






