தொழிலாளர் ஆணையரகம் மற்றும் சார்நிலை அலுவலகங்களுக்கு புதிய கட்டிடம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

வழக்கறிஞர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் புதிய அலுவலக வளாகத்தினை அணுகுமாறு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
சென்னை,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, அண்ணாநகரில் கட்டப்பட்டுள்ள தொழிலாளர் ஆணையரகம் மற்றும் அதன் சார்நிலை அலுவலகங்களுக்கான புதிய கட்டிடத்தினை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். சென்னை, தேனாம்பேட்டை, டி.எம்.எஸ். வளாகத்தில் செயல்பட்டு வரும் தொழிலாளர் ஆணையர் அலுவலகம், சென்னை, கூடுதல் தொழிலாளர் ஆணையர் அலுவலகம், சென்னை, தொழிலாளர் இணை ஆணையர்-1 அலுவலகம் மற்றும் சென்னை, தொழிலாளர் இணை ஆணையர்-2 அலுவலகம் ஆகிய அலுவலகங்கள் மேற்படி புதிய அலுவலக கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது.
அதனை தொடர்ந்து மேற்படி அலுவலகங்கள் ”தொழிலாளர் ஆணையரகம், தொழிலாளர் அலுவலர் குடியிருப்பு வளாகம், பி-பிளாக், 6-வது நிழற்சாலை, அண்ணா நகர், சென்னை – 600 040.” என்ற புதிய முகவரியில் 10.11.2025 அன்று முதல் செயல்பட உள்ளது. ஏற்கனவே இந்த அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளுக்காக வருகை புரிகின்ற வழக்கறிஞர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் புதிய அலுவலக வளாகத்தினை அணுகுமாறு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.






