தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது: செல்வப்பெருந்தகை


தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது: செல்வப்பெருந்தகை
x
தினத்தந்தி 3 Jan 2026 11:50 AM IST (Updated: 3 Jan 2026 11:58 AM IST)
t-max-icont-min-icon

பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாக செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

சென்னை,

காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை சத்யமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தொகுதி பங்கீடு குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து செல்வப்பெருந்தகை பேசியதாவது;

“ பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திமுக தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர் எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.விரைவில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும். ” என்றார்.

இதற்கிடையே, திமுக - காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு சுமூகமாக நடைபெற்று வருவதாக செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஸ் சோடங்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story