முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கான மாத ஓய்வூதியம் ரூ.35 ஆயிரமாக உயர்வு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கான மாத ஓய்வூதியம் ரூ.35 ஆயிரமாக உயர்வு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
x
தினத்தந்தி 26 April 2025 12:42 PM IST (Updated: 26 April 2025 12:44 PM IST)
t-max-icont-min-icon

முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மேலவை உறுப்பினர்களின் குடும்ப ஓய்வூதியம் ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.17,500 ஆக உயர்த்தப்படுகிறது என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

சென்னை

தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் மேலவை உறுப்பினர்களுக்கான மாத ஓய்வூதியம் ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.35 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. 1-4-2025 முதல் இது அமலுக்கு வருகிறது. இதேபோல், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மேலவை உறுப்பினர்களின் குடும்ப ஓய்வூதியம் ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.17,500 ஆகவும், அவர்களுக்கான மருத்துவப்படி ரூ.75 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாகவும் உயர்த்தப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

1 More update

Next Story