மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை


மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை
x

கடையநல்லூர், திருநெல்வேலி கிராமப்புறம், தென்காசி கோட்டங்களில் உள்ள துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

தென்காசி

திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர், திருநெல்வேலி கிராமப்புறம், தென்காசி கோட்டங்களில் உள்ள துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி கோட்ட செயற்பொறியாளர் கற்பகவிநாயகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கீழப்பாவூர் மற்றும் அச்சன்புதூர் துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் (18.11.2025, செவ்வாய்க்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் பின்வரும் ஊர்கள் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

அதன்படி பாவூர்சத்திரம், கீழப்பாவூர், மேலப்பாவூர், குலசேகரப்பட்டி, குறும்பலாப்பேரி, நாட்டார்பட்டி, ஆவுடையானூர், வெய்காலிப்பட்டி, சின்னநாடானூர், திப்பணம்பட்டி, செட்டியூர், பெத்தநாடார்பட்டி, கரிசலூர், செல்லத்தாயார்புரம், மகிழ்வண்ணநாதபுரம், அடைக்கலப்பட்டினம் வடக்கு, சாலைப்புதூர்.

வடகரை, அச்சன்புதூர், நெடுவயல், வாவாநகரம், காசிதர்மம், பண்பொழி, மேக்கரை, கரிசல்குடியிருப்பு ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் கற்பகவிநாயகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாரணாபுரம் துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் (18.11.2025, செவ்வாய்க்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் பின்வரும் இடங்களில் இருக்காது.

காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை:

தரணிநகர், வாசுதேவநல்லூர், சங்கனாப்பேரி, திருமலாபுரம், ராமநாதபுரம், கூடலூர், சங்குபுரம், கீழப்புதூர், நெல்கட்டும்செவல், சுப்ரமணியபுரம், உள்ளார், வெள்ளானைகோட்டை, மலையடிக்குறிச்சி மற்றும் தாருகாபுரம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஊத்துமலை, ஆலங்குளம் மற்றும் கீழப்பாவூர் துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் (18.11.2025, செவ்வாய்க்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணைமின் நிலையங்களில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

அதன்படி ஊத்துமலை, கீழக்கலங்கல், குறிஞ்சான்குளம், மேலமருதப்பப்புரம், சோலைசேரி, கருவந்தா, அமுதாபுரம், மாவிலியூத்து, கல்லத்திக்குளம், கங்கணாங்கிணறு, ருக்குமணியம்மாள்புரம்.

ஆலங்குளம், ஆண்டிபட்டி, நல்லூர், சிவலார்குளம், ஆண்டிபட்டி, ஐந்தான்கட்டளை, துத்திக்குளம், கல்லூத்து, குருவன்கோட்டை, குறிப்பின்குளம், அத்தியூத்து, குத்தபாஞ்சான், மாயமான்குறிச்சி, கழநீர்குளம், அடைக்கலப்பட்டிணம், பூலான்குளம், முத்துகிருஷ்னபேரி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story