7 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு


7 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
x

7 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

வங்கக்கடலில் நிலவிய ‘தித்வா’ புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு இழந்தது. இருப்பினும், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து நீடிக்கிறது. சென்னையில் அதிகாலை முதல் பலத்த காற்றுடன் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தின் 7 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை மலைப்பகுதிகள், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story