அமைச்சர் பதவி: ராஜினாமா செய்கிறாரா செந்தில் பாலாஜி?


அமைச்சர் பதவி: ராஜினாமா செய்கிறாரா செந்தில் பாலாஜி?
x

மசோதாவை ரகுபதி தாக்கல் செய்து இருப்பதால், செந்தில் பாலாஜி ராஜினாமா செய்யலாம் என்று சொல்லப்படுகிறது.

சென்னை,

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் போது, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி பெரும் தவறு செய்துவிட்டோம் என்று கூறிய உச்ச நீதிமன்றம், அமைச்சர் பதவியா? ஜாமீனா? என்பதை திங்கள் கிழமை மதியத்திற்குள் முடிவு செய்து தெரிவிக்க வேண்டும் என்று கூறியது. இதனால், அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா செய்யலாம் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், சட்டமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கலுக்கு பதிலாக ரகுபதி மசோதாவை தாக்கல் செய்துள்ளார். உயிரி மருத்துவ கழிவுகள் தொடர்பான மசோதாவை செந்தில் பாலாஜி தாக்கல் செய்வதாக இருந்தது. செந்தில் பாலாஜி தாக்கல் செய்வார் என நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்ட நிலையில், ரகுபதி தாக்கல் செய்துள்ளர். சட்டசபையின் இறுதி நாளன்று மசோதா விவாதாத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இந்த மசோதாவை ரகுபதி தாக்கல் செய்து இருப்பதால், செந்தில் பாலாஜி ராஜினாமா செய்யலாம் என்று சொல்லப்படுகிறது.

1 More update

Next Story